பாரதிக்கு பாரதிதாசன் போல, பாரதிதாசனுக்கு தாசனாக சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட உவமைக் கவிஞர் சுரதா (85) ஜுன் 20-ம் தேதி மரணமடைந்தார்.
அமுதைப் பொழியும் நிலவே
அமுதும் தேனும் எதற்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
போன்ற அவரது பாடல்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை.
அன்னார் அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
அண்ணாக்கண்ணனி்ன் வலைப்பதிவில் சுரதா நேர்காணல் ஒன்று இருக்கிறது. சுட்டி : http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112280734633660613.html
3 comments:
useful link..thanks..
(கவனமாக மூக்கு நீங்கள் இல்லை என்ற உணர்வுடன் எழுதுகிறேன்:)
அய்யய்யோ!
உங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் துயரம் சூழ்ந்து கொண்டது.
என்ன அருமையான கவிஞர். அவரின் முழுப்படைப்புக்களையும் படிக்காவிட்டாலும் அவரின் சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன்.
நான் அடிக்கடி கேட்கும் அவரின் பாடல்:
"அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே"
கவிஞர் சுரதாவின் இழப்பு தமிழினத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கின்றேன்.
இந்த மேதையைத் தமிழ்திரையுலகம், வாழும் வரை பயன் படுத்தத் தவறிவிட்டதே!!!
அவர் எழுதமாட்டேனென்றா ?சொன்னார். இப்போ எழுதுவது போல் எழுதமாட்டேன் என்று சொல்லியிருக்கலாம். "கழுதைகளுக்கு-கற்பூரவாசம்" தான்.
யோகன் பாரிஸ்
Post a Comment