அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Thursday, June 01, 2006
வாழ்க Selective "நடு நிலைமை". வாழ்க Selective "மத சார்பின்மை"!
Disclaimer: மத, ஜாதி தொடர்பான விவாதங்களில் (விஷயமில்லாததால்) கலந்து கொள்வதில்லை, எழுதுவதில்லை என்று சங்கல்பம் செய்திருந்தும் மனக்குரங்கு அடங்காமல் சிலசமயம் கிளம்பிவிடுகிறது. ஆகையால் இந்தப் பதிவு. இது எனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் குரங்கை யாரோ தட்டியெழுப்பிவிட்டதால் விளைந்த வினையே தவிர, நான் காரணமில்லை.
முன்பெல்லாம் திரைப்படங்களில் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் காட்டப்படுபவர்களுக்கு "நடுநிலைமையுடன்" ராம், ரஹீம், ராபர்ட் என்று பெயர் வைத்திருப்பார்கள். ஒற்றைப் பாத்திரமாக இருந்தால் ஏதாவது ஒரு மதத்துக்கான "கெட்-அப்"புடன் வில்லன் காட்சியளிப்பான்.
தி டாவின்சி கோட் திரைப்படத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. இப்போது தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அது தொடர்பான தமிழ் முரசு செய்தி கீழே.
மற்ற மதங்களை - குறிப்பாக இந்து மதக் கடவுளரை - இழிவு படுத்தியும், நையாண்டி செய்தும் எத்தனையோ படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன - இன்றும். அவற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு விட்டுவிட்டு, இந்தப் படத்தை மட்டும் தடை செய்திருக்கிறார்கள்.
ஒன்றா "கருத்துச் சுதந்திரம்" என்று எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் "மத நல்லிணக்கத்திற்கு ஊறு" என்ற ரீதியில் எந்த மதத்தைப் பற்றிப் படம் வந்தாலும் தடை செய்யவேண்டும்.
வாழ்க Selective "நடு நிலைமை". வாழ்க Selective "மத சார்பின்மை"!
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
இதுபோன்ற சந்தர்ப்பவாதம் பேசி, சந்தர்ப்பவாதத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் தி[ருத்தவே] மு[டியாத] க[ழகம்]விடமிருந்து வேறு எதையாவது எதிபார்த்தீர்கள் என்றால், உங்களைக் கண்டு நான் அனுதாபப்படுகிறேன்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். [505]
எல்லாம் காங்கிரஸ் கூட தி.மு.க சேர்ந்த தோஷம் தான்.
SK
நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அரசியல்ரீதியாக - ஜாதி, மத ஓட்டுகளை நம்பியிருக்கும் - எந்தவொரு கட்சிக்கும் சாத்தியமில்லை. அப்படி நிறைவேற்ற விழையும் கட்சி அடுத்த தேர்தலில் ஆட்சியை இழக்கும்.
கட்சிகளின் தொலைநோக்குப் பார்வை ஆட்சிக்காலத்துக்குள் அடங்கிவிடுகிறது. அதற்குள் செய்ய முடிந்ததைச் செய்து எடுக்க முடிந்ததை எடுத்து இடத்தைக் காலிபண்ணத் தயாராக இருப்பதுதான் சாமர்த்தியசாலிகளுக்கான ஒரே வழி.
அவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது.
தொலைநோக்கு என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல - ஓட்டுப் போடும் பொதுஜனத்திற்கும் தேவையானது என்பது என் நம்பிக்கை. பொதுஜனத்திடம் இல்லாததை அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கவும் கூடாது என்பது கற்ற பாடம்.
நன்றி.
நீங்கள் சுட்டுவது மிக சரி.
சுந்தர்,
திருட்டு VCD நல்ல விற்பனையாகும். யாரோ ஒரு கரை வேட்டி செய்த சதியாக இருக்கும்.
அந்த புக்கையும் தடை செய்தார்களா?
கால்கரி சிவா அண்ணே
//திருட்டு VCD நல்ல விற்பனையாகும். //
அப்படிப் போடுங்க அருவாளை.
படத்தைப் பாக்கணும்னா எம்புட்டு வழி இருக்கு!. திருட்டுத் தகடு பாக்கறது திருட்டுத்தனம் அதனால வேண்டாம். வேணுமின்னா பக்கத்து மாநிலத்துல போய் பாக்கறதுக்கு (அதாவது பாத்தே ஆகணும்னு இருக்கறவங்க) எவ்வளவு நேரம் ஆகப் போவுது?
அல்லது "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக"ன்னு தேசிய, பன்னாட்டுச் சானல் எதிலாச்சும் போட்டாய்ங்கன்னா என்ன பண்ணுவாய்ங்க?
தடையோ கிடையோ அது எப்படியோ போகட்டும். அப்படியே எந்த மதங்களைக் கிண்டல் பண்ணியோ இழிவு படுத்தியோ யாரு படம் எடுத்தாலும் - அது விவேக்கோட நகைச்சுவை இடைச்செருகலா இருந்தாலும் - அதையும் தடை பண்ணிட்டாய்ங்கன்னா நல்லா இருக்கும். அல்லாட்டி அம்புட்டு பேத்தையும் விட்டுரணும். அங்கிட்டு ஒரு காலு இங்கிட்டு ஒரு காலுன்னு வச்சிக்கறதுதான் உதைக்குது.
சுந்தர். பாத்து. எல்லாப் பக்கமும் முத்திரைத் தொழிலாளர்கள் சுத்திக்கிட்டு இருக்காங்க. பாய்ஞ்சு வந்திருவாங்க உங்களுக்கும் முத்திரை குத்த. நியாய அநியாயம் எல்லாம் பேசுனீங்கன்னா அவ்வளவு தான் - நீங்க வர்ண பார்ப்பனீயவாதி தான். :-)
வாங்க குமரன்.
//நீங்க வர்ண பார்ப்பனீயவாதி தான்.//
வடிவேலு சொல்றமாரி "இதுக்கெல்லாம் ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?"
வின்னர் படத்துல ராத்திரி திருட்டுத்தனமா வீட்டுக்குள்ள நுழையற வடிவேலு இன்னொரு திருடனைச் சந்திச்சு, அப்புறம் திருடன் மாட்டிக்கிட்டதும் வடிவேலுவைப் பாத்து "என்ன குரு ஓடறீங்க. இவிய்ங்க இப்படித்தான். எப்பவுமே போட்டு அடிச்சுக்கிட்டேதான் இருப்பாய்ங்க. நமக்கு இதெல்லாம் புதுசா? அடிக்கு பயந்தா தொழில் நடத்த முடியுமா?" என்று அதிரடியாக வடிவேலுவைப் போட்டுக் குடுப்பார். அது சரி... எதுக்கு இதைச் சொல்லிக்கிட்ருக்கேன்? :(
பாயணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்கன்னா பாஞ்சிக்கிட்டுப் போவட்டும். அப்படியாவது அவங்க கோவம் வடிஞ்சா சரி.
எனக்குப் "பார்ப்பனீயம்"ங்கற வார்த்தையக் கேட்டாலே "பார்த்தீனியச்" செடி ஞாபகத்துக்கு வருது! :) (எப்படி எடுத்துக் கொடுக்கறேன் பாருங்க!) :)
பின்னூட்டத்திற்கும் எச்சரிக்கைக்கும் நன்றி.
இந்த வலைப்பதிவுகளில் வலைஞர்கள் சிலர் இதை ஞாயப்படுத்துவதை எதில் சேர்ப்பது...?
இதை எல்லாம் கேட்டால், மதவாதி.
இதை ஞாயப்படுத்தினால் "செகுலர்வாதி". Nauseating!
//நீங்க சொன்ன மாதிரியே வந்துட்டாரு நம்ம முத்திரை ஆபீசரு, மேப் போடறதுக்கு. //
ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே!
-உண்மையான அப்பாவித் தமிழன்
முஸ்லிம்களைத் தொடர்ந்து இழிவு செய்து வெளிவந்த அர்ஜுன்,மணிரத்னம்,சங்கர் படங்கள் ,திராவிட இயக்கதை கொச்சைப்படுத்தி வெளிவந்த இருவர் பற்றியெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?
மிதக்கும் வெளி!
//முஸ்லிம்களைத் தொடர்ந்து இழிவு செய்து வெளிவந்த அர்ஜுன்,மணிரத்னம்,சங்கர் படங்கள் ,திராவிட இயக்கதை கொச்சைப்படுத்தி வெளிவந்த இருவர் பற்றியெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?//
சற்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? எனக்குத் தெரிந்து இந்து முஸ்லீம் பிரச்சினையை முன்னிட்டு வந்த மணிரத்னத்தின் படம் - பம்பாய். அதில் மும்பை கலவரங்களைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். இந்து இளைஞன் முஸ்லீம் யுவதிக்கிடையேயான காதலைப் பற்றியும், திருமணம் செய்துகொண்டு அவர்கள் படும் அல்லல்களைப் பற்றியும் காட்டியிருந்தார்.நாசர் கிட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் மனதைத் தொடும் வகையில் இருந்தது. அதிலும் குறிப்பாக எரியும் வீட்டிலிருந்து இந்துவாக நடித்த நாஸர் முஸ்லீம் கிட்டியின் புனித நூலை உயிரைப் பொருட்படுத்தாது பாதுகாத்து எடுத்து வரும் காட்சியில் என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதே போல கலவரத்தில் பிள்ளைகளைத் தொலைத்து மறுபடியும் கிடைத்ததும், கலவரக்காரர்களிடம் கதறும் மனீஷா, அரவிந்த்சாமி - அதைத் தொடர்ந்த வசனங்களும் மிகவும் நெகிழச் செய்தன என்னை.
இதில் இழிவு என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
அர்ஜுன், ஷங்கர் படங்கள் - எனக்கு குறிப்பாக எதுவும் நினைவுக்கு வரவில்லை. :(
என்னைக் கேட்டால் "புனைவு"களாக வரும் திரைப்படங்களையெல்லாம் தீவிரமாக கணக்கில் எடுத்துக்கொள்வது சரியல்ல என்று தோன்றுகிறது.
அப்படிப் பார்த்தால் எதையுமே கற்பனையாகப் படைக்க முடியாது - படம் என்று மட்டுமல்ல - நாவலோ கதையோ கூட எழுத முடியாது.
என்னுடைய கேள்வியே ஏன் இந்தப் படத்துக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும் - நீங்களே குறிப்பிட்டமாதிரி - ஒரு பேச்சுக்கு மணிரத்னம், ஷங்கர், அர்ஜுன் போன்றவர்களின் படங்கள் இழிவுபடுத்தும் விதத்தில் இருக்கினறன என்பதை ஒப்புக் கொண்டால் - அந்தப் படங்களையும் ஏன் தடை செய்யவில்லை?
ஆக, ஒன்றா கருத்துச் சுதந்திரம் அல்லது படைப்புச் சுதந்திரம் என்று எதையும் கண்டுகொள்ளக் கூடாது. அல்லது மதம் குறித்த படைப்புகள் அனைத்தையும் தடைசெய்ய வேண்டும். இதுவே நான் சொல்ல வந்தது. இதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று பிரித்துப் பார்க்கவில்லை.
நன்றி.
// குமரன் (Kumaran) said...
சுந்தர். பாத்து. எல்லாப் பக்கமும் முத்திரைத் தொழிலாளர்கள் சுத்திக்கிட்டு இருக்காங்க. பாய்ஞ்சு வந்திருவாங்க உங்களுக்கும் முத்திரை குத்த.//
குமரன் கையக்குடுங்க. நீங்க சொன்ன மாதிரியே வந்துட்டாரு நம்ம முத்திரை ஆபீசரு, மேப் போடறதுக்கு.
பாத்துக்கிட்டே இருங்க. இனிமே வலை பதியறவங்க எல்லாம் எங்கிட்ட சான்றிதழ் வாங்கிகிட்டுதான் வலைபதியணும்னு சொல்லப்போறாரு நம்ம ஆபீசர்.
-அப்பாவித் தமிழன்
Post a Comment