நேற்றைக்கு வந்து கழுத்தறுத்த மின்னஞ்சல் இது! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
***
"நாய்க்கு நாலு கால் இருக்கலாம். அதால லோக்கல் கால், எஸ்டிடி, ஐஎஸ்டி, இவ்வளவு ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது"
"கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம். காவேரி ஆத்துலயும் மீன் பிடிக்கலாம். ஆனா அய்யர் ஆத்துல மீன் முடியுமா?"
கேப்டன் : "திருவல்லுவர் 1300 குரல் எளுதியிருந்தாலும் அவரால எப்பவும் ஒரு குரல்லதான் பேச முடியும்"
"என்னதான் ஒனக்குத் தலை சுத்தினாலும் ஒன் முதுகை நீ பாக்க முடியுமா?"
"மீன் பிடிக்கறவனை மீனவன்னு கூப்பிடறோம். நாய் பிடிக்கவறனை ஏன் நாயவன்னு கூப்பிடறதில்லை?"
"அவன் குண்டா இருக்காங்கறதுக்காக துப்பாக்கிக்குள்ள போடமுடியுமா?"
"தேள் கொட்டினா வலிக்கும். முடி கொட்டினா வலிக்குமா?"
"ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம். காலேஜ் டெஸ்ட்லயும் பிட் அடிக்கலாம். ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?"
"கோல மாவுல கோலம் போடலாம். கடலை மாவுல கடலை போட முடியுமா?"
"லைப்ல ஒண்ணுமில்லைன்னா போர் அடிக்கும். தலைல ஒண்ணுமில்லைன்னா க்ளேர் அடிக்கும்"
"ஏழு பரம்பரைக்கு ஒக்காந்து சாப்பிட பணம் இருந்தாலும் பாஸ்ட்புட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்"
"இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆயிடலாம். பிரசிடன்ஸி காலேஜ்ல படிச்சா பிரசிடண்ட் ஆக முடியுமா?"
"ஆட்டோக்கு ஆட்டோன்னு பேர் இருந்தாலும் மேனுவலாதான் அதை ஓட்டணும்"
"தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும். ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது"
"வாழை மரம் தார் போடும். ஆனா அத வச்சு ரோடு போட முடியுமா?"
"ஹேண்ட் வாஷ்னா கை கழுவுறது. பேஸ் வாஷ்னா மூஞ்சி கழுவுறது. அப்ப ப்ரெய்ன் வாஷ்னா என்ன மூளையைக் கழுவுறதா?"
"டீ கப்ல டீ இருக்கும். ஆனா வோர்ல்ட் கப்ல வோர்ல்ட் இருக்குமா?"
"பால் கோவா பாலில் இருந்து பண்ணலாம். ஆனா ரசகுல்லாவை ரசத்திலருந்து பண்ண முடியுமா?"
"பல்வலி வந்தா பல்லைப் புடுங்கிரலாம். ஆனா கால்வலி வந்தா காலைப் புடுங்க முடியுமா? இல்லாட்டி தலவலி வந்தா தலையைப் புடுங்கத்தான் முடியுமா?"
"மனுஷனுக்கு சிக்கன் குனியா வரலாம். சிக்கனுக்கு மனுஷன் குனியா வருமா?"
"லாஸ்ட். பட் நாட் த லீஸ்ட். சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா?"
என்ன கொடுமை சரவணன்?
***
6 comments:
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று தலைப்பில் போட்டுவிட்டீர்களே!
அப்புறம் சரவணன என்ன செய்வார் பாவம், விட்டு விடுங்கள்!
எல்லாம் டேக் இட் ஈஸி பாலிஸி கணக்கில் எடுத்துக்கொள்ளவும்!
என்ன கொடுமை சரவணன்?
திருவல்லுவர் அல்ல திருவள்ளுவர்
இங்க எதுனா பிரச்சனையா? பின்ன இன்னாத்துக்குபா எல்லோரும் என்னை(சரவணன்)கொடுமைப் படுத்துறீங்க!
அன்புடன்...
சரவணன்.
"கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம். காவேரி ஆத்துலயும் மீன் பிடிக்கலாம். ஆனா அய்யர் ஆத்துல மீன் முடியுமா?"
மீனா இருந்தா பிடிக்கலாம்.
# நாய கல்லால அடிக்லாம். கல்ல நாயால அடிக்க முடியுமா?
# முடியிருக்குறவன் சாமிக்கு மொட்டை போடலாம். சொட்டையனுக்கு சாமி முடி கொடுக்குமா?
ஏன்யா இந்த கொலவெறி. சத்த நாழி தமிழ்மணம்ல உலாவலாம்னா, ஏன் இப்படி?
பாம்புக்கும் ஷாம்ப்புக்கும் என்ன வித்தியாசம்?
ஷாம்பு போட்டா தலையில நுரை வரும்..
பாம்பு போட்டா வாயில நுரை வரும்..
-ராஜ்
Post a Comment