Saturday, April 15, 2006

பெரிய கடவுள் காக்க வேண்டும்



மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்

ஓம் ஓம் ஓம்

அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

1 comment:

சுதேசன் said...

புது வருடத்தன்று பாரதியின்கவிதை தந்து
வலைப்பூவில் தவழவிட்ட தங்களுக்கும்
நன்றி கலந்த வாழ்த்துக்கள்