Friday, September 08, 2006

Ma Tujhe Salaam!

Ma Tujhe Salaam!

மத சாயத்தை எல்லாவற்றிலும் பூசி நாற்றமெடுங்கள். எப்படியோ தொலைங்கள். ஆனால் தாய் மீது பூசாதீர்கள்!

இந்தியனாக இருங்கள்!

இறை கண்ணைத் திறக்கவே! மறைக்க அல்ல!

வந்தே மாதரம்!

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

நம்மால் எளிதில் சொல்லமுடிகிறது ஆனால் இன்னொருவரின் இடத்திலிருந்து பார்த்தால்தான் சில விஷயங்கள் புரியும் என நினைக்கிறேன்.

முஸ்லிம்கள் கண்ணியமாக இதைக் கையாண்டிருக்கிறார்கள். சிலர் வந்தே மாதரம் பாடியுள்ளனர், சிலர் சாரே ஜகான்செ அச்சா பாடியுள்ளனர்.

சாரே ஜஹான்செ அச்சா நேரடியான தேச பக்திப் பாடல் என்பது அதற்கு இன்னும் சிறப்பை கொடுக்கிறது.

அரசு வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் எனச் சொல்லாமல் வந்தே மாதரத்தைப் பாடி நினைவு கூறுங்கள் எனச் சொல்லியிருக்கலாம்.

ஜனகன்மன நேரடியான தேசபக்திப் பாடல் இல்லை எனவும் அதை விலக்கவேண்டும் எனவும் சுற்றிவந்த மின்மடல்கள் ஏராளம்.

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையோடு கேட்டுப் பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை'

ஹனிபா ஐயாவின் இந்தப் பாடல் கேட்டிருப்பீர்கள் இதன் வரிகள் பொதுவாக இருப்பதால் இறைவணக்கப்பாடலாக எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா?

கடினம்தான்.

Sundar Padmanaban said...

நன்றி சிறில்.

//ஹனிபா ஐயாவின் இந்தப் பாடல் கேட்டிருப்பீர்கள் இதன் வரிகள் பொதுவாக இருப்பதால் இறைவணக்கப்பாடலாக எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா?//

கேட்காமலா? கேட்டது மட்டுமில்லை. எத்தனையோ முறை பாடியிருக்கிறேன். பாடுவேன்.

இதே போல எத்தனையோ நல்ல இறைவணக்கப் பாடல்கள் இருக்கின்றன.

நாம் இப்போது பேசுவது சுதந்திர காலத்திற்கு முன்பு தோன்றி நாடெங்கும் சுதந்திர தாகத்தை எழுப்பி எழுச்சி ஊட்டி எங்கும் முழங்கிய பாடலைப் பற்றி. மேலும் இது 'இறை வணக்கப்' பாடலாக யாரும் குறிப்பிடவில்லை.
"தாய் மண்ணை வணங்கி மரியாதை செலுத்தும்" பாடலாகத்தான் நான் உணர்கிறேன். இதைப் பாடி "கோவிந்தாய நமஹ" என்று மதத்தையோ கடவுளையோ நினைத்துக் கொள்வதில்லை! இதைப் பாடும்போதும் கேட்கும்போதும் நாட்டைப் பற்றி நினைக்கிறேன். பெருமிதம் கொள்கிறேன்.

சாரே ஜகான்செ அச்சா -அருமையான கீதம். அதையும் பாடலாம். எதாக இருந்தால் என்ன? சுதந்திரத்திற்குப் பாடுபட்டு அதே நோக்கில் எழுதப்பட்ட கீதங்கள் இவை. இவற்றில் ஏன் மதத்தை இழுக்கவேண்டும் என்று தெரியவில்லை.

ஜடாயுவின் பதிவில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

தேசியம் என்று வரும்போது அதை மதரீதியாக அணுகாமல் இந்தியன் என்ற உணர்வோடு அணுகினாலே போதுமானது. மத ரீதியாக எல்லாவற்றையும் அணுக ஆரம்பித்தால் தேசியம் என்ற அளவில் ஒன்றும் மிஞ்சாது! அவரவர் மதத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு நாட்டுக்குள் தனி நாடாக ஒட்டாமல் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டியதுதான். அப்புறம் எதுக்கு "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற வெட்டி முழக்கம்?

//அரசு வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் எனச் சொல்லாமல் வந்தே மாதரத்தைப் பாடி நினைவு கூறுங்கள் எனச் சொல்லியிருக்கலாம்.
//

அப்படிச் சொல்லியிருந்தாலும் "பாட முடியாது. அது எங்கள் மதத்திற்கு எதிரானது" என்று நிச்சயம் குரல்கள் வந்திருக்கும். நோக்கம் எதிர்ப்பது என்ற பிறகு கட்டாயப் படுத்தியிருந்தாலும் கட்டாயமில்லை என்று சொல்லியிருந்தாலும் எதிர்க்கத்தான் செய்திருப்பார்கள்.

ஒரு அரசைப் பொருத்தவரை எல்லாவற்றுக்கும் சாய்ஸ் கொடுப்பது விபரீதத்தில்தான் முடியும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்ச கட்டாயமாக்கல்கள் சில விஷயங்களில் தேவை. எல்லாரையும் திருப்திபடுத்துவது யாராலும் முடியாது. எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுப்பதால்தான் முதுகெலும்பு இல்லாத மண்புழு அரசை வைத்துக்கொண்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

என்னைக் கேட்டால் நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கவேண்டியிருக்கின்றன. தலையாயதாக தீவிரவாதம்!

வந்தே மாதரம் பாடினாலும் பாடாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை.

ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தைகள் எந்த வித்தியாசமில்லாமல் வந்தே மாதரம் பாடும் புகைப்படங்களைப் பத்திரிகைகளில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு நாம் பேசிக்கொண்டிருப்பது ஏதாவது புரியுமா? அவர்கள் வயதில் நமக்குப் புரிந்திருக்குமா?

உண்மையில் வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது அக்குழந்தைகளே. அவர்களைப் பார்க்கும்போது நானும் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறேன்.

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//என்னைக் கேட்டால் நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கவேண்டியிருக்கின்றன. தலையாயதாக தீவிரவாதம்!

வந்தே மாதரம் பாடினாலும் பாடாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை.//

உண்மை.