Saturday, May 26, 2007

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் எங்களுதுடா!

"அருணாச்சலப் பிரதேசத்தில் இருப்பவர்களெல்லாம் சீனர்கள். சீனர்கள் சீனாவுக்குள் வர விஸா தேவையில்லை - அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்தது"

Image and video hosting by TinyPic

இந்தியா சீனாவுக்கு பயிற்சி பெறுவதற்காக 107 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விஸா வேண்டி விண்ணப்பித்திருந்தது. 107-இல் ஒருவர் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியர். அவருடைய விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்த சீனத் தூதரக அதிகாரிகள் நிராகரிப்புக்குக் குறிப்பிட்ட காரணம்தான் மேலே குறிப்பிட்ட செய்தி!!

'ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது மாநிலமே எங்களுடையது என்று சொல்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று அருணாச்சல மாநில முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக சர்வ வல்லமை பொருந்திய, வெளிநாடுகள் சீண்டிப் பார்க்கவே அஞ்சும் நம் தேசத்தை ஆளும் தலைவர்கள் கீழ்க்கண்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

1. எல்லா செய்தித்தாள்களிலும் 'அருணாச்சலம் எங்கள் மாநிலம். அதில் கையளவு நிலத்தைக் கூட - 'ஏழைகளுக்கு இலவச நிலம்' போன்ற திட்டம் மூலமாகக் கூட - யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்' என்று நாள் தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிடும்.

2. சீனாவின் அருணாச்சலப் பிரதேச ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா. சபையில் இந்தியத் தூதர் பிரச்சினை எழுப்புவார்.

3. அரசியல்வாதிகள் ராஜஸ்தானில் அடையாள உண்ணாவிரதம் இருப்பார்கள்

4. உள்நோக்கத்துடன் அருணாச்சல மாநிலத்தை சீனாவின் பகுதியாக வரைபடத்தில் சித்தரித்திருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய அரசு கண்டனம் வெளியிடும்

5. 2020-இல் இந்தியப் பிரதமர் அருணாச்சல மாநிலத்திற்கு 'அமைதிப் பேருந்து' ஒன்றின் முதல் 'வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தைக்' கொடியசைத்துத் துவக்கி வைப்பார்.

6. IoAP-க்கும் CoAP-க்கும் சர்வதேச எல்லை ஒன்றை வரையறை செய்ய இந்தியாவும் சீனாவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும்.

7. அனுதினமும் அந்தச் சர்வதேச எல்லையில் 'ஒப்பந்தத்தை மீறுவதாக' இந்தியா மீது சீனாவும், சீனா மீது இந்தியாவும் குற்றம் சாட்டிக் கொள்ளும்.

8. 'அருணாச்சல மாநிலத்தின் சட்டசபையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது சட்டசபையையும் சீனாவைச் சேர்ந்தது என்கிறது. இது கண்டனத்துக்குரியது' என்று அருணாச்சலப் பிரதேச முதல்வர் அறிக்கை வெளியிடுவார்.

9. 'அருணாச்சல மாநிலத்தில் நுழைவதற்கு இந்தியர்கள் விஸா வேண்டி விண்ணப்பிக்கும் நடைமுறை 2021 ஜனவரியிலிருந்து அமலுக்கு வருகிறது' என்று சீனா செய்தித் தாள்களில் செய்தி வரும்.

10. சீனப் பிரமர் இந்தியாவுக்கு விஜயம் செய்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு 'சந்திப்பு தோல்வி' என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பார்.

11. அஸாமில் நமக்குத் தெரியாமல் ஊடுருவிய சீனப்படைகளுடன் போரிட்டு ஐந்தாயிரம் படைவீரர்களைக் காவுகொடுத்து சீனப் படையை அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஓட ஓட விரட்டி வெற்றிபெற்றது இந்தியா!

12. அருணாச்சலப் பிரதேசத்தில் "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் எங்களுதுடா!" என்று 60-வருடமாகத் தமிழ்த் தி்ரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ஆடிப்பாடி நடித்துப் படமாக்க விரும்பிய பகுதியில் படபிடிப்பு நடத்த சீன அரசு அனுமதி மறுத்துவிட்டது! ஆனால் பாடல் பெருவெற்றி பெற்று தமிழகத்தின் பட்டி தொட்டிகளெங்கும் டீக்கடைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

****

வயிறு எரிகிறது ஐயா! வயிறு எரிகிறது! இம்மாதிரி முதுகெலும்பேயில்லாத, முடிவு எடுக்கும் , கடும் நடவடிக்கை எடுக்கும் திராணியில்லாத தலைவர்கள் கையில் சிக்கி இந்தியா இப்படிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை நினைக்கையில் - ஏதோ ஒருவிதத்தில் இதற்கு நானும் ஒரு மறைமுகக் காரணகர்த்தன் என்று நினைக்கையில் - வயிறு எரிகிறது!

****
இந்தப் பிரச்சினை தொடர்பான கட்டுரை ஒன்று ரீடிப் தளத்தில் இங்கு இருக்கிறது.

10 comments:

SathyaPriyan said...

இந்தியப் போர்களை பற்றிய தொடர் கட்டுரை ஒன்று எழுதி முடித்து முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள்.............

Raveendran Chinnasamy said...

I think Indian Citizens (we) never got truth behind Indo-China War as politicians want to hide failure of Nehru and indian armies so whenever AP issue rocks with China there are some petty actions.

If you can read India's china War by Neville Maxwell which is baned in india would give some third eye to indo-china issues.

Unknown said...

ரத்தம் கொதிக்கிறது சுந்தர். திபெத்திலிருந்து இந்தியா வருகிறவர்களுக்கு இதே காரனத்தை சொல்லி நாமும் விசா வேண்டாம் எனவேண்டும்.அப்போதுதான் சீனாகாரனுக்கு புத்தி வரும்.

Anonymous said...

We are paying the Price for our patience. We really do not know the difference between Patience and "Ilichchavaaiththanam". When China made us as a jokers by attacking us when we are calling Indhi chini bhai bhai.. We should have understand them and we must have retaliated the account with them. Not only China, Pakistan also very much aware that we will not strike them first and also we will not allow them to occupy by losing many lives. So, all our neighbors are trying to encash our foolishness. As long as we are having such a spineless creatures as leaders we will be occupied by China and Pakistan and in near future by Srilanka also. Because they will get the courage by seeing all this happenings. May God save as from this useless leaders. Jayakumar - Doha - Qatar

உண்மைத்தமிழன் said...

ஜி-8 மாநாட்டுக்காக சென்றிருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சீன அதிபரையும் சந்தித்துப் பேசியுள்ளார். அதில் இந்த அருணாச்சலப்பிரதேச பிரச்சினை இடம் பெறவில்லை. இதனைத் தவிர்த்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று இங்கேயிருந்து கிளம்பும்போதே நம்மிடம் சொல்லிவிட்டார்களாம். சீனர்களுக்கு நம்முடைய 'பெருமை'யடிக்கும் விஷயம் மிகவும் பிடித்துப் போயுள்ளது. அதனால்தான் நம் பிரதமருக்கு அவர்களது ஜனாதிபதி முகம் காட்டியுள்ளார். நாமும் அதை டிவியில் பார்த்துப் புல்லரிப்பில் உள்ளோம். சிவசங்கர்மேனன் அதிகாரிகள் மட்டத்தில் அடுத்துப் பேசுவோம் என்றிருக்கிறார். நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமத்திருப்பதை அதிகாரிகள் மட்டத்தில் பேசி முடிவெடுக்கப் போகிறார்களாம்.. வாழ்க..

Sundar Padmanaban said...

சத்யப்ரியன்,

பின்னூட்டத்திற்கு நன்றி.

ரவீந்திரன் சின்னசாமி,

//If you can read India's china War by Neville Maxwell which is baned in india would give some third eye to indo-china issues.
//

Thanks for the referrence. I will try to get this book.

செல்வன்,

//திபெத்திலிருந்து இந்தியா வருகிறவர்களுக்கு இதே காரனத்தை சொல்லி நாமும் விசா வேண்டாம் எனவேண்டும்.அப்போதுதான் சீனாகாரனுக்கு புத்தி வரும்.
//

வேணாம். ஏற்கெனவே விசா இல்லாம நெறய பேரு வயல் பெருச்சாளி மாதிரி ஊடுருவிக்கிட்டு இருக்காங்க. அவங்களையெல்லாம் உள்ளயே விடக்கூடாது!

என்னமோ போங்க. நெனச்சுப் பாத்தா ஆயாசமா இருக்கு.

Sundar Padmanaban said...

உண்மைத்தமிழன்.

சொல்லாதீங்க. அவமானமா இருக்கு. அது எப்படிங்க கொஞ்சம் கூட ரோஷ மானமேயில்லாம இவங்களால இப்படி இருக்க முடியுது?

உள்ளூர்லயும் தீவிரவாதத்தைத் தடுக்கத் துப்பில்லை. எல்லாத்தலயும் தாமதமோ தாமதம் - நம்ம நாட்டுக்குள்ள நடக்கற தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்காம பேச்சு வார்த்தை, வழக்குன்னு வக்கில்லாம இருக்கறவளை வெளிநாடுகள் மேல கடும் நடவடிக்கை எடுப்பாங்கன்னு எதிர்பார்ப்பது மடத்தனம்.

புரியலைங்க. Diplomatic-ஆ இதை அணுகுவது சரியான்னு புரியலை. நம்ம எவ்ளோவேணா கோஷம் போடலாம். பிரதமர் போன்ற தலைவர்கள் டக்குன்னு சண்டைக்கு உத்திரவு போட முடியாது. நல்லுறவைப் பேணும் கடமை இருக்கறதால நிதானமா பிரச்சினைகளை அணுகவேண்டியிருக்குங்கறது புரியுது. ஆனா இதே நிலைதானே மத்த நாட்டுத் தலைவர்களுக்கும். அவர்கள் வெக்கமில்லாம அராஜகமா இப்படிப் பண்றப்போ எந்த எழவுக்கு பேச்சு வார்த்தை நடத்தணும்ங்கறதுதான் புரியலை. நம் வீட்டுக் காம்பவுண்டை இடிச்சுட்டு பக்கத்துவீட்டுக்காரன் ஆக்கிரமிச்சு வீடு கட்டினா, வீட்டுக்குக் கூப்ட்டு காபி கொடுத்து உபசரிச்சுப் பேச்சு வார்த்தை நடத்துவோமா? இது நியாயத்துக்கு அநியாயமில்லையா? வெரட்டியடிக்க வேணாமா நம்ம இடத்தைவிட்டு?

குழப்பமாக இருக்கிறது.

Sundar Padmanaban said...

*வக்கில்லாம இருக்கறவளை

தட்டச்சுப் பிழை. *இருக்கறவங்களை*ன்னு இருக்கணும்.

Anonymous said...

AP belongs to the people of AP. There must be a referendum held in AP to end this crisis.

Sundar Padmanaban said...

அனானி,

//AP belongs to the people of AP. There must be a referendum held in AP to end this crisis.
//

இப்படி ஆரம்பிச்சுத்தான் இப்ப காஷ்மீர் யாரோட இருக்கணுங்கறத காஷ்மீர் மக்கள்ட்ட கேக்கணும்னு ஆளாளுக்குக் கொரல் எழுப்பிக்கிட்டு இருக்காங்க. இருக்கற ஆளுங்களை விரட்டியடிச்சுட்டு இப்போ "காஷ்மீர் மக்களா" இருக்கற ஊடுருவல்காரர்கள்கிட்ட கேட்டா "நாங்க பாக்கிஸ்தானோட சேந்துக்கறோம்" என்பார்கள். இல்லாட்டி தனியா இருப்போம் என்பார்கள். இதை அனுமதித்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மண்ணாந்தை மக்களை தேச விரோத தலைவர்கள் மூளைச் சலவை செய்து 'பிரிந்து போவோம்' என்று பிரிவினையை ஊக்கப்படுத்த மாட்டார்களா? இப்படியே ஒவ்வொரு மாநிலத்துலயும் கேட்டுக்கிட்டுப் பண்றதா அப்பறம் இந்தியா என்று ஒரு தேசம் எங்க இருக்கும் ஐயா! இது நியாயமா?

பிரச்சினை அருணாசல பிரதேச மக்களிடம் இல்லை. அதை ஆக்கிரமித்திருக்கும் சீனா உருவாக்கும் பிரச்சினை. இந்தியா அதைக் கடுமையாகக் கையாளவேண்டும் என்கிறேன் நான்.

INDIA BELONGS TO INDIANS - PERIOD!

உண்மையில் உள்ளத்தைத் தொட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதையும், நம் தலைவர்கள் அதை கைகட்டி வாய்மூடிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதையும் பார்த்தால் ஒரு வேளை நாம் தான் அவர்கள் இடத்தை ஆக்கிரமித்துவிட்டு நம்முது என்று பம்முகிறோமோ என்று சந்தேகமாக எழ ஆரம்பித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அந்தச் சந்தேகம் எழக் காரணம் நம் தலைவர்கள் இந்த விஷயத்தைக் கையாளும் (கையாலாகாத) விதம்!