Saturday, July 12, 2008

(தமிழகக்) கரைமேல் பிறக்க வைத்தான் - எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்


காலையில் போனால் மாலையில் திரும்புவது நிச்சயமில்லாத வாழ்க்கைதான் - ஆனால் இந்நிச்சயமின்மை கடற் தாயினால்தானேயொழிய மூளை மழுங்கிய மனுச நாய்களினால் அல்ல. அன்றாட ஜீவனத்திற்குக் கடுமையாக உழைத்தால்தான் சோறு என்பது மீனவர்களின் விதி. அதிலும் தமிழக மீனவர்களின் நிலை பரிதாபமானது.

இலங்கை என்ற சிறிய அண்டைதேசத்தின் ராணுவத்தினர் அனுதினமும் நமது மீனவர்களைக் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொல்கின்றனர். இங்கே தலைவர்களும் ராணுவமும் என்ன மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்களா? எது எதற்கோ போராட்டம் நடத்துகிற கேவலப் பிறவிகள் இதற்குப் போராட்டம் நடத்தவேண்டாமா? அப்படி வேறு என்ன முக்கியமான மயிர்பிடுங்கி வேலை இருக்கிறதய்யா உங்களுக்கு? சோறுதானே தின்னுகிறீர்கள்? அல்லது வேறு ஏதாவதா? முதுகெலும்பில்லா மண்புழுக்களா நீங்கள்?

தமிழக மீனவர்கள் கடலில் மீனைத்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கடலில் மீன் அதிகம் கிடைக்கும் இடத்திற்குச் சென்று மீன் பிடிப்பது இயற்கையே. இதில் எல்லையைத் தாண்டிப் போகிறோமா என்று அவர்களது ஒட்டிய வயிற்றுக்குத் தெரிவதில்லை - கடலில் என்ன எல்லையைக் காட்ட லட்சுமணன் கோடா போட்டு வைத்திருக்கிறது? "எல்லைத் தாண்டி வந்தார்கள் சுட்டுக் கொன்றோம்" என்று அவர்கள் சொல்லலாம். இது வரை இந்திய கடற்படை எல்லை தாண்டி வந்த எத்தனை இலங்கை மீனவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறது? நானறிந்த வரையில் இல்லை. அப்படியிருக்க அவர்கள் ஏன் நம் மீனவர்களைக் கொல்ல வேண்டும்? இந்தியா இலங்கையைக் கண்டிக்க வேண்டாமா? எச்சரிக்க வேண்டாமா? நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இப்படி வெறியுடன் நடந்து கொள்ளும் இலங்கைக் கடற்படையினரைச் சுளுக்கெடுக்க வேண்டாமா?

பரம எதிரியாக இருக்கும் பாக்கிஸ்தான் ராணுவம்கூட நம் மீனவர்களை இப்படி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதில்லை - எல்லைதாண்டிச் சென்றால் சிறைபிடித்துத்தான் போகிறார்கள். இந்த இலங்கை ராணுவத்தினருக்கு இப்படிச் சர்வசாதாரணமாக நம்நாட்டு மீனவர்களைச் சுட்டுக்கொல்லும் தைரியத்தைக் கொடுத்தது யார்? எல்லை தாண்டி வந்திருந்தாலும் அவர்களைக் கைது செய்யாமல் சுடுவது எவ்விதத்தில் நியாயம்? ஐயா இந்தியத் தலைவர்களே, மாநில முதல்வர்களே - ஒரு வேளை கேட்பாரற்றுச் சாவது இலங்கைத் தமிழன் என்று தவறாக நினைத்து, வழக்கம்போலச் சும்மா இருக்கிறீர்களா?

போன வாரம் என்று நினைக்கிறேன். இஸ்ரேலில் ஒரு இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனியனை நடுரோட்டில் பாய்ண்ட் ப்ளாங் ரேஞ்சில் சுட்டுக் கொன்றார்கள். பாலஸ்தீனத்திலிருந்து எல்லை தாண்டி வந்ததற்காக அவனைப் போட்டுத் தள்ளவில்லை. கட்டட வேலைகளுக்காக உபயோகிக்க வைத்திருந்த கனரக வாகனமொன்றை ஓட்டிக்கொண்டிருந்தவன் அதே வாகனத்தைக்கொண்டு சாலையில் தாறுமாறாக ஓட்டி கார்கள் பேருந்து என்று கண்ணில் தென்பட்ட அனைத்தின் மீதும் மோதிச் சாய்த்து மூன்று பொதுமக்களைக் கொன்றுவிட்டு, இன்னும் மதம்பிடித்த யானைபோல வாகனத்தைத் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான். இஸ்ரேலிய காவலர்கள், உளவாளிகள் விரட்டிச் சென்று வாகனத்தின் மீதேறி - எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று - அந்த நபரை - மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்க - போட்டுத் தள்ளினார்கள். யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடவில்லை. அங்கேயே உடனடித் தீர்ப்பு!

இந்திய கடற்படை என்று ஒன்று செயல்படுகிறதா? இம்மாதிரி அபாயகரமான கடற்பகுதியைக் காக்காமல் வேறு எங்காவது சொந்தபந்தங்களுக்கு மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்களா? மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கித் தீர்க்க வேண்டாமா அவர்களை? அதைச் செய்யாமல் அவர்கள் கால்களை ஏனய்யா நக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

தன்னாட்டு மக்களை கொசு அடிப்பது போல தினமும் கொல்லும் ராணுவத்தை வரவழைத்து தன்னாட்டிலேயே பயிற்சி அளிக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்ன நடந்தாலும் தேமேயென்று கோழையாக இருப்பதை அஹிம்சை என்று தப்பாகத் புரிந்துகொண்டிருக்கிறார்களோ?

எனக்கு வருகிற ஆத்திரத்தை எப்படிக் கொட்டுவது என்று தெரியவில்லை. வாழ்நாளில் உபயோகிக்காத கெட்டவார்த்தைகளையெல்லாம் சொல்லித் திட்டவேண்டும் போல இருக்கிறது.

அவனவன் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு மூன்று வேளை தின்று கொழுத்துக்கொண்டு தினமும் ஒரு கலைநிகழ்ச்சி, அரைகுறை நங்கைகளில் தொப்புள் நடனங்கள், புதிய திரைப்படம் என்று பார்த்துக்கொண்டு பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கையில் அவர்களது செத்த தோலுக்கு நாட்டின் ஓரத்தில் வாழ்க்கையின் ஓரத்தில் அமர்ந்தபடி விழாமலிருக்கக் கடலுக்குத் தினமும் செல்லும் மீனவர்களின் துயரங்கள் உறைக்குமா?

நாட்டு மக்களைக் காக்கத் துப்பில்லாத அரசன் நாசமாய்த்தான் போவான். இவர்களெல்லாம் தலைவர்களா? த்தூ..... போங்கய்யா, போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளுங்கள்.

உங்களது தேசத்தில் இப்படி ஜந்துக்களைப் போன்ற வாழ்க்கையை வாழ்வதைவிட அண்டைய நாட்டின் ராணுவத்தினால் சுடப்பட்டுக் கடலில் சாவது எவ்வளவோ மேல்.

போய் அடுத்த தேர்தலுக்கான வியாபாரத்தைக் கவனியுங்கள்.

ச்சீ!

***

12 comments:

Anonymous said...

சுந்தர்,

ரெம்ப கோபமாயிருக்கீங்கன்றது புரியுது. ஆனா நீங்க கேள்ைவி கேட்டஅரசின்யல்வியாதிங்க நெலமையும் கொஞ்சம் பாருங்க.

மானிலத்தில பாமக வெளிய போயாச்சு, மத்தியில கம்யூ வாபஸ் வாங்கியாச்சு.

இந்த நிலமையில இதையெல்லாம் பார்க்க நேரமில்லீங்க.

மந்திரி பதவி கெடைக்காட்டாலும் பரவாயில்ல, உள்ள பதவி போயிரக் கூடாதுன்னு அவனவன் கெடந்து தவிக்கிறான்.

டாஸ்மாக்ல ஒரு கட்டிங் விட்டுட்டு உளியின் ஓசை கேட்டா எல்லாம் சரியாப் போய்ரும்.

பேய்கள் அரசாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.

வேறென்ன சொல்ல.

சின்னப் பையன் said...

:-(((((

Sundar Padmanaban said...

வடகரை வேலன்

ஒரு அமெரிக்க மீனவரை க்யூபா சுட்டுக் கொன்றிருந்தால், ஒரு இஸ்ரேலியனைச் சுடக்கூட வேண்டாம் - சுடப்போகிறேன் என்று துப்பாக்கியை உயர்த்தினால், அமெரிக்காவும் இஸ்ரேலும் என்ன செய்திருக்கும்?

பாக்கிஸ்தான், சீனா, வங்கம், இலங்கை என்று இப்படி எல்லா திசைகளிலும் எல்லாருக்கும் கூஜா தூக்கி விளக்குப்பிடித்து, சொந்த மக்களை அய்யோவென்று சாக விடும் துப்புகெட்ட மானங்கெட்ட தலைவர்கள் இருந்தால் என்ன போனால் என்ன? மொத்த நாட்டையே விலைமகளாக்கி விற்றுவிடுவார்கள் - வார்கள் என்ன வார்கள் - விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

வயிறு எரிகிறது.

பிரேம்ஜி said...

ரொம்ப வருத்தமா இருக்கு.கடல்ல இருக்குற உயிரினங்களை காப்பாற்ற இருக்குற அக்கறை கூட மனிதர்களை காப்பாற்ற இல்லை.மானங்கெட்ட பயலுவ... இவனுங்களுக்கு இவங்களும் இவங்க குடும்பம் தான் முக்கியம்.எல்லா அரசியல் வாதியும் இதிலே ஒண்ணு தான்.இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ன்னு பழைய திரைப்படத்தின் வசனம் ஞாபகம் வருகிறது.

Sundar Padmanaban said...

ச்சின்னப் பையன், பிரேம்ஜி

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Sundar Padmanaban said...

செய்தி - நன்றி : தினமலர்.காம்

தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம்

சுட்டி : http://dinamalar.com/fpnnews.asp?News_id=1277&cls=row4

விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

சரத்குமார் பிறந்தநாள் விழாவில் பேசியது "இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக இலங்கை தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இந்த பிரச்னை தீருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்கவேண்டும். இலங்கையில் அமைதி நிலைநாட்ட மத்திய அரசு தலையிடவேண்டும். ஆயுதம் இந்திய அரசு இலங்கைக்கு கொடுக்கக்கூடாது. "

Joe said...

Joe,
These sort of killings have been happening for a long time.

I don't think or hope to see a solution in the near future.

Indian politicians will not do anything more than sending a letter to Srilanka, begging them not to shoot our fishermen (which will obviously be trashed by them)

God save us & this country!

Sundar Padmanaban said...

Joe,

I'm appalled/stumped with this thick-skin attitude of our leaders! Truly Pathetic!

நம்மையெல்லாம் வெட்கித் தலைகுனிந்து நிற்க வைக்கிறார்களே என்று வேதனையாக இருக்கிறது.

அது எப்படி ஒரு அரசால் தமது குடிமக்கள் அனுதினமும் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடிகிறது? ஜீரணிக்கவே முடியலை.

அதுவும் கொல்வது யார் - சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி, இன ஒழிப்பை மும்முரமாகச் செய்து வரும் இன்னொரு கொடுங்கோல் அரசு!

தமிழனுக்கு எங்கு வாழ்ந்தாலும் இதுதான் விதியா? ம்ஹும்!

கிரி said...

சுந்தர் என்ன இப்படி பொங்கி எழுந்து விட்டீர்கள்..எப்போதும் அமைதியான முறையில் பேசும் நீங்களே அதிரடியாக எழுதி விட்டீர்கள்.

என் மனதில் இருந்ததை அப்படியே கூறி விட்டீர்கள். ஒருத்தனாவது இதற்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்றால் இல்லை..வயித்தெரிச்சலாக இருக்கிறது. பலதை சொல்ல நினைக்கிறேன் சொல்லி என்ன பயன் என்று மனம் வெதும்புகிறேன்.

இது குறித்த பதிவு நானும் ஒன்று போட வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்து இருந்தேன். என் எண்ணங்களை அப்படியே நீங்கள் பதிவாக்கி விட்டீர்கள். நன்றி.

Sundar Padmanaban said...

கிரி

ஆறவே இல்லைங்க மனசு! :-(

பணத்துக்காக மீனவர்களில் சிலர் ஆயுதங்கள், மற்றும் பல பொருட்களைக் கடத்தி அங்கு சென்று 'அவர்களிடம்' கொடுப்பதாகவும், அங்கிருந்து 'அவர்கள்' அவ்வப்போது இங்கு வந்து போய்கொண்டிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறேன். இப்படி எல்லைக்கப்பாலிருந்து ஊடுருவுவதை எந்த அரசும் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதான்.

ஆனால் செத்தவர்கள் யாரும் கடத்தல் செய்து செத்த மீனவர்களில்லை என்றுதான் நினைக்கிறேன். இரவில் எல்லை பார்க்க முடியாது மீன்பிடிக்கும் இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கும் அப்பாவி மீனவர்கள்தான்.

கடத்தும் மீனவர்கள் 'தமிழனுக்கு உதவுகிறோம்' என்ற தியாக எண்ணத்துடனா கடத்துகிறார்கள்? இல்லவே இல்லை - பணம் - பேராசை. இவர்களால் மொத்த மீனவ சமுதாயமும் இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிர்விடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது பரிதாபமான நிலை. இதைப் பார்த்துக்கொண்டு எதையும் செய்யாமல் புண்ணைச் சொறியும் அரசுகள் - தலைவர்கள்! கேவலத்திலும் கேவலமான விஷயம் இது!

எவ்வளவு கொடுமையான நிலை இந்த ஜனங்களுக்கு!

எதிர்கட்சியும் உதிரிக் கட்சிகளும் அறிக்கைகள் விட்டு போராட்டங்கள் நடத்தியாகிவிட்டது. ஆளுங்கட்சி உண்ணாவிரதமிருந்து, கட்சத் தீவை மீட்போம் என்று மனோகரா ரேஞ்சில் வசனம் பேசியாகிவிட்டது. இன்னும் ஒரு வாரம். மக்கள் மறந்துவிட்டு வழக்கம்போல மெகாசீரியல்களில் மூழ்கிவிடுவார்கள். ஊடகங்கள் குலுக்கல் நடனங்களைக் காட்டி விளம்பரதாரர் வருவாயில் கண்ணும் கருத்துமாக இருக்கும், அரசியல்வாதிகள் 'நான் மீனவ நண்பன்' என்று தினமும் அறிக்கை விட்டு ஓட்டுக்கு வலை வீசுவார்கள்.

மொத்தத்தில் இக்கொலைகள் தொடர்ந்துகொண்டுதானிருக்கும்!

அடுத்தவாரமோ என்னவோ ஏதோ சார்க் உச்சி மாநாடு நடக்கிறதாமே. அங்கு போய் நம் பிரதமரும் மற்றவர்களும் என்ன பிடுங்குகிறார்கள் என்று பார்ப்போம். அது சரி. அடுத்த வாரம் யார் பிரதமராய் அங்கு போவார்கள் என்பதே நாளைக்குத்தான் தெரியும். இந்நேரம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெட்டிகளும் பேரங்களும் படு பிஸியாக நடக்கும் வேளையிலே எங்கோ கடலில் எவனோ எவனையோ சுட்டுக் கொல்வதைப் பற்றிக் கவலைப்பட யாருக்கு நேரமிருக்கிறது?

திபெத்தில் மனித உரிமைகளை மீறும் சீனா நடத்தும் ஒலிம்பிக் பந்தய விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று உலகின் இந்தக் கோடியில் இருக்கும் அமெரிக்க வல்லரசின் அதிபரை மக்களும் ஊடகங்களும் கேட்டுக் கொள்கின்றன.

இங்கே சொந்த மக்களைக் கொல்கிறார்கள். நாம் சார்க் உச்சி மாநாட்டுக்குப் போய் 'கண்டனம் தெரிவித்து' 'வேண்டுகோள்' விடுப்போம்! அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து ராணுவப் பயிற்சி கொடுப்போம்.

என்னத்தைச் சொல்றது? :-((

கிரி said...

//ஆனால் செத்தவர்கள் யாரும் கடத்தல் செய்து செத்த மீனவர்களில்லை என்றுதான் நினைக்கிறேன். இரவில் எல்லை பார்க்க முடியாது மீன்பிடிக்கும் இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கும் அப்பாவி மீனவர்கள்தான்.//

நீங்கள் கூறுவது சரி தான். அதுவும் இல்லாமல் கைது செய்யாமல் இப்படி குருவி சுடுவதை போல சுடுவது என்ன நியாயம்? எனக்கு இப்படி சுடும் இலங்கை கடற்படை மீது கூட கோபம் இல்லை..இதை எல்லாம் கண்டுக்காம இருக்கும் நம் அரசியல்வாதிகள் மீது தான். இவங்க குளிரூட்டப்பட்ட அறையில் சுகமாக இருக்க வேண்டும் என்றால் ஏதாவது போராட்டாம் நடத்தி போராடுவது போல போக்கு காட்டி விட்டு போய் விடுகிறார்கள்..விஜயகாந்த் போராட்டம் நடத்தியவுடன் இவர் எங்கே பேர் வாங்கி சென்று விடுவாரோ என்று தி மு க உண்ணாவிரதம் இருக்கிறது. போராட்டம் நடத்தும் எவரும் அவர்களின் மீதுள்ள அக்கரையில் நடத்தவில்லை, எல்லோரும் தங்கள் வாக்கு வங்கியை அதிகப்படுத்தவே இப்படி செய்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் தமிழ் தமிழ் என்று உயிர் விடும் நம் தலைவர்கள் யாருடைய கண்ணுக்கும் இது தெரியவில்லை. இவை எல்லாம் பார்க்கும் போது மனது வெறுத்து போகிறது.. கண் முன்னே அனைத்தும் நடந்தும் ஒன்றும் கேட்க முடியாத நிலையில் இருப்பதை விட கொடுமையான விஷயம் எதுவும் இல்லை.

//இந்நேரம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெட்டிகளும் பேரங்களும் படு பிஸியாக நடக்கும் //

30 கோடி என்று செய்தி தாளில் பார்த்தேன்..இவர்கள் எல்லாம் வந்து....அட போங்க சுந்தர் கடுப்பாகுது