Friday, February 03, 2006

பழிவாங்கப்படும் விலங்கினச் சேர்க்கையாளர்கள்..

செல்வனின் இந்தப் பதிவைப் படித்ததும் எதிர்காலத்தில் இப்படியும் கூட செய்திகள் / பதிவுகள் வரலாம் என்று தோன்றியது (இது ஒரு கற்பனை: No offense meant.. :))



யுடா மாநிலம் 2030ல் விலங்கினச் சேர்க்கையாளர்களுக்கு முழு திருமண உரிமை அளித்தது. உடனடியாக அமெரிக்காவின் 37 மாநிலங்கள் அவசர அவசரமாக விலங்குத் திருமணங்களுக்கு அனுமதி மறுத்து டோஹ்மா ( Defense of human marriage act) என்ற சட்டத்தை இயற்றின. மனிதர்களுக்குள் (ஆணும் ஆணுமோ, ஆணும் பெண்ணுமோ. பெண்ணும் பெண்ணுமோ) மட்டும்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற இந்த பிற்போக்கு சட்டம் இன்னும் பல மாநிலங்களில் அமுலில் இருக்கிறது.

மேற்கத்திய நாடுகள் பலவும் இதுபோல் பிற்போக்குத்தனமான சட்டங்களை ஒழித்துக் கட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளுடன் உறவு கொள்வதற்கு சட்ட பூர்வ அனுமதி பிரான்ஸ், ஸ்கான்டினேவியா, பிரிட்டன், நியுஸிலாந்து, செக், நெதெர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் வழங்கப்படுகிறது. விரைவில் இந்த நாடுகளில் மனித-விலங்குத் தம்பதிகளுக்கு முழு திருமண உரிமையும் வழங்கப்படக்கூடும்.

ஐரோப்பிய யூனியன் 2030 சார்ட்டரின்படி விலங்குகளுடன் சேர்க்கையும், விலங்குகளுடன் திருமணமும் ஒரு மனிதனின் அடிப்படை சுதந்திரமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. தனிமனிதனின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க இனி ஐரோப்பாவில் எந்த அரசுக்கும் உரிமை இல்லை.

இப்படி ஐரோப்பா முன்னேற்றப் பாதையில் செல்ல அமெரிக்கா இன்னும் 20ம் நூற்றாண்டின் சட்டங்களையே வைத்துக் கொண்டு இருக்கிறது. இல்லினாய் உட்பட 15 மாநிலங்களில் விலங்குகளுடன் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இருக்கிறது. ஐரோப்பாவில் 20ம் நூறாண்டிலேயே விலங்குகளுடன் சேர்க்கையை குற்றப் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலராடோ 2012ல் 53% மெஜாரிடியோடு தனது விலங்குச் சேர்க்கை குடிமக்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. 2009ல் மய்னும் அதே போல் ஒரு பிற்போக்கு சட்டத்தை இயற்றியது. கலிபோர்னியா போன்ற லிபெரல்கள் ஆளும் மாநிலம் கூட 2010ல் இம்மாதிரி சட்டம் போட்டது என்றால் மனித உரிமை அங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் முதலில் விலங்கினச் சேர்க்கையாளர்கள் விரல் நீட்டுவது ரிபப்ளிக்கன் கட்சியைத் தான். அபார்ஷனுக்கு அனுமதி மறுப்பு, விலங்குகளுடன் திருமணத்துக்கு தடை விதிப்பு, குளோனிங் செய்யத் தடை விதிப்பு, பரிணாமவாதத்தை பள்ளிகளில் பயிற்றுவிக்க தடை விதிப்பது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம்.

அமெரிக்காவில் இப்படி என்றால் இந்தியாவில் நிலமை மிக கேவலமாக உள்ளது. இன்னும் 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சட்டங்களை வைத்துக் கொண்டு டில்லி போலிசார் சமீபத்தில் 4 விலங்கினச் சேர்க்கையாளர்களை கைது செய்தனர் (அவர்களின் துணையாக இருந்த நான்கு ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன). சில நாடுகளில் இவர்களுக்கு திருமண அனுமதியே வழங்கப்படுகிறது. சில நாடுகளில் திருமன உறவுக்கு அனுமதி இல்லையென்றாலும் விலங்கினச் சேர்க்கை குற்றமல்ல. இந்தியாவில் விலங்கினச் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இன்னும் இருக்கிறது.

அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் விலங்கினச் சேர்க்கை மன நோயல்ல, வியாதியல்ல, மனிதனின் இயற்கையான பழக்கம் என்று எப்போதோ சொல்லிவிட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளிலேயே அது இன்னும் ஏறவில்லை. இந்திய அரசாங்கத்தின் காதுகளில் ஏறுவது எப்போது?

***

21 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா. ஆரம்பிச்சுட்டாங்க.

சிறில் அலெக்ஸ் said...

//(அவர்களின் துணையாக இருந்த நான்கு ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன). //

இந்தப்பதிவுக்கு மேனகா காந்தி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்

:))

Anonymous said...

ha ha ha...hilarious. too good. i have left a comment in that original post too.

Mann

Unknown said...

ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள் சுந்தர்.

Muthu said...

சுந்தர்,
அசத்திப்புட்டீங்க. கலக்கல் பதிவு.:-) :-) :-). ஆனால் இது இன்றைக்கு முழுக்க முழுக்க நகைச்சுவை. நாளை உண்மையாகலாம்.

Sundar Padmanaban said...

//ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள் சுந்தர்.//

அய்யோ செல்வன்... There is no comparison or whatsoever..

Well having said that..

ஒரு கற்பனையாக, நகைச்சுவைக்காக இட்டதே இந்தப் பதிவு.. ஆனாலும்

//ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற இந்த பிற்போக்கு சட்டம் இன்னும் பல மாநிலங்களில் அமுலில் இருக்கிறது//

//19ம் நூற்றாண்டின் பிரிட்டிஷ்//

ஆக இத்தகைய சட்டங்கள் மிகவும் "பிற்போக்குத் தனமானவை" " என்ற கருத்தை உங்களது பதிவு வலியுறுத்துகிறது. ஓரினச் சேர்க்கையை நியாயப் படுத்தும் தொனியில் உங்கள் பதிவிருப்பதால் - ஓரினச் சேர்க்கை என்பது மனிதனின் உணர்வுகளில் ஒன்று என்ற தொனி இருப்பதால் -

மனிதனே மனிதனின் செய்கைகளை நியாயப்படுத்தி - அவை இயற்கைக்கு முரணாக இருந்தாலும் கூட - அதைச் சட்டரீதியாகவும் செயல்படுத்துவதால் - விலங்கினச் சேர்க்கையாளர்கள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து "மனித உரிமையை" நிலைநாட்டுவதற்காகக் குரல் கொடுக்கலாம். விலங்குகள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கப் போவதில்லை - மனிதனோ "சுதந்திர"த்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. அப்போது இது பெரிய அளவில் நடைபெறும் போது குரல்கள் ஓங்கி ஒலிக்க - இதையும் நியாயப் படுத்தியும், ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி, ஏதாவது ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில் சட்ட ரீதியாகவும் ஒப்புதல் கொடுத்துவிடுவார்கள்...

இப்போதே இத்தகைய வக்கிரங்கள் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதே உண்மை - இதைவிடக் கொடுமையான விஷயங்களையும் மனிதன் செய்துகொண்டுதான் இருக்கிறான் என்பதும் உண்மை! இப்போது அநியாயமாக, கற்பனையாகத் தோன்றும் இது எதிர்காலத்தில் நியாயப்படுத்தப்பட்ட நிஜங்களாகிவிடும்.

குரங்கைக் கேட்டுக்கொண்டா, அது உயிருடன் இருக்கும்போதே மண்டையை உடைத்து மூளையை எடுத்துப் பார்த்து ஆய்வுக்கூடங்களில் சட்டரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன?. எலிகளின் இதயத்தை நோண்டியெடுப்பதும், தவளைகளைக் கூறு போடுவதும் - மனிதனின் "சுதந்திரம்" அல்லது "அடிப்படை உணர்வுகள்" என்று சொல்லலாமா?

எனிவே, விவாதத்தைக் கிளப்ப இப்பதிவை எழுதவில்லை; இது சீரியஸான பதிவாக மாறுவதில் எனக்கு விருப்பமில்லை. அதற்காக சீரியஸாகப் பேசாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் இப்பதிவில் வேண்டாம்.

புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

Sundar Padmanaban said...

இலவசக் கொத்தனார்,

என்னத்தை ஆரம்பிச்சுட்டோம்? புரியலையே? :(

Sundar Padmanaban said...

சிறில் அலெக்ஸ்

நானும் நீலச் சிலுவை உறுப்பினருங்க! நானும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்!

Sundar Padmanaban said...

அனானி,

நீங்கள்தான் இந்தப் பதிவின் நோக்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நன்றி.

rv said...

//- ஓரினச் சேர்க்கை என்பது மனிதனின் உணர்வுகளில் ஒன்று என்ற தொனி இருப்பதால் -
//
இதை நீங்கள் சொல்லியதால் மட்டுமே இந்தப் பின்னூட்டம். நீங்கள் இந்த விஷயத்தை பற்றி நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஓரினச் சேர்க்கை என்பது இயற்கையிலேயே உண்டு. மரபணுக்களும் இதற்கு முக்கிய காரணம் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. தகவலுக்கே.

Sundar Padmanaban said...

//நீங்கள் இந்த விஷயத்தை பற்றி நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஓரினச் சேர்க்கை என்பது இயற்கையிலேயே உண்டு. மரபணுக்களும் இதற்கு முக்கிய காரணம் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. தகவலுக்கே.//

ராம். நான் இதைச் சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

இது மனிதனின் உணர்வுகளில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை. அதனால் தானே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இதைப் போலவே இன்னும் நிறைய உணர்வுகளும் மனிதனுக்கு உண்டு - அவற்றில் சில இப்போதைய சமூக அளவுகோலில் "வக்கிர உணர்வுகளாக" அறியப் படுகிறது; (அதுவும் ஒவ்வொரு சமூகத்திற்கும் வேறுபடுகிறது - நான் நம் சமூக அளவுகோலை வைத்துச் சொல்கிறேன்). எதிர்காலத்தில் அவையும் "அடிப்படை உணர்வுகளாகலாம்" என்ற சாத்தியத்தையொட்டிய கற்பனையே இந்தப் பதிவு.

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற எந்த நிலையையும் நான் எடுக்கவில்லை. நம் உணர்வு நமக்கு; அவர்கள் உணர்வு அவர்களுக்கு. அவ்வளவுதான்.

ஒரு காலத்தில் நரமாமிச பட்சிணிகள் இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.(இப்போதும் எங்கிட்டாவது இருக்கலாம். யார் கண்டா?). விலங்கினச் சேர்க்கையாளர்களும் கற்பனையான விஷயம் இல்லை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இன்னொரு விஷயம் ஆணும் பெண்ணுமில்லாத மனிதர்களைப் பற்றி. நம்மூரில் (வட நாட்டில் பரவாயில்லை என்று கேள்விபட்டேன்) இன்னும் இவர்களை அருவருக்கத் தக்கவர்களாகவே பார்க்கும், நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறதே. அவர்களும் மனிதர்கள்தானே?. என்னைக் கேட்டால் முதலில் ஆதரவுக் கரம் தேவைப் படுபவர்கள் இவர்கள்தான். சமூகத்தில் இவர்கள் படும் கொடுமை சகிக்கமுடியாததாக இருக்கிறது.

நன்றி.

இலவசக்கொத்தனார் said...

1)ஒருத்தர் ஒரு பதிவு போடறது.
2)அதை இந்த மாதிரி கலாய்த்து ஒரு பதிவு.
3) இது கலாய்ப்பு என்பது புரியாமல் ஒரு நாலு பின்னூட்டம்.
4) அப்புறம் ரொம்ப சீரியஸா போகும்.
5) விஷயம் புரியாமல், நகைச்சுவை மறந்து அடிதடி.
6) மீண்டும் அடுத்த ஸ்டெப் 1 வந்த பின் இதை சுத்தமாக மறப்பது.

இப்படித்தான் நிறையா பதிவுகள் போகுது.

நீங்க 2) பதிவை போட்ட உடனே இதைத்தான் சொன்னேன்.
3) நடந்துவிட்டது. நீங்களும் பெரீய்ய்ய பின்னூட்டம் போட வேண்டியதாப் போச்சு.
4) இராமநாதன் மருத்துவ தகவலொண்ணை சொல்லி ஆரம்பிச்சு இருக்காரு.
5) வராம இருக்க வேண்டிக் கொள்வோம்.

தப்பா ஒண்ணும் சொல்லலை. இவ்வளவு பெருசா சொல்ல வேண்டாமேன்னு, அண்ணன் வடிவேலு காட்டிய வழியில் இரண்டு வார்த்தைகளை சொன்னேன். அவ்வளவுதான்.

Sundar Padmanaban said...

இலவசக் கொத்தனார்,

//5) விஷயம் புரியாமல், நகைச்சுவை மறந்து அடிதடி.//

//5) வராம இருக்க வேண்டிக் கொள்வோம்.//

நானும் வேண்டிக்கறேன்.

அது சரி. வலைப்பதிவுல அடிதடி என்ன புதுசான விஷயமா? அதெல்லாம் (படிச்சுப்) பழகிப் போச்சு.

அப்படி யாராச்சும் வந்து அடிதடி பண்ணாங்கன்னு வச்சுக்குங்க. சும்மா விட்ருவேனா நானு? ஓடியேஏஏஏஏஏ போயிர மாட்டேன்?

அநியாயத்துக்கு வலைப்பதிவு நிகழ்வுகளைத் துல்லியமாச் சொல்றீங்களே! எனக்கு வர்ற கடுப்புக்கு ஒங்களுக்கு "வலைப்பதிவு நாஸ்ட்ரடாமஸ்"னு பட்டம் கொடுக்கப் போறேன்! :)

NONO said...

//எதிர்காலத்தில் அவையும் "அடிப்படை உணர்வுகளாகலாம்" என்ற சாத்தியத்தையொட்டிய கற்பனையே இந்தப் பதிவு//

ஓரினச் சேர்கை என்பது இரு மனிதர்களேட சம்மதத்துடன் நடப்பது! விலங்கின சேர்ப்பு ஒரு காலத்திலும் விலங்கின் சம்மதத்துடன் நடக்கிறத்துக்கு சந்தர்பமே இல்லை! ஆகையால் இது எக்காலத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது! மிருக வதைக்குள்தான் அடங்கும்!!!!

இலவசக்கொத்தனார் said...

என்னய்யா? பினூட்டமெல்லாம் டப்புன்னு நின்னு போச்சு? நகைச்சுவையை பத்தி எழுதுங்களேன்.
சுந்தர், நீங்களும் பட்டையில் சமூகம் என்பதற்கு பதிலாக நையாண்டி என் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

Sundar Padmanaban said...

// இது எக்காலத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது! மிருக வதைக்குள்தான் அடங்கும்!!!!//

ஆமாம். இதெல்லாம் மிருக வதை தான்.

அப்ப

//குரங்கைக் கேட்டுக்கொண்டா, அது உயிருடன் இருக்கும்போதே மண்டையை உடைத்து மூளையை எடுத்துப் பார்த்து ஆய்வுக்கூடங்களில் சட்டரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன?. எலிகளின் இதயத்தை நோண்டியெடுப்பதும், தவளைகளைக் கூறு போடுவதும் -//

இதெல்லாம்?

Sundar Padmanaban said...

// நீங்களும் பட்டையில் சமூகம் என்பதற்கு பதிலாக நையாண்டி என் குறிப்பிட்டிருக்க வேண்டும்.//

ஆமாங்க. தோணவேயில்லை. இப்ப மாத்த முடியாதுன்னு நினைக்கிறேன். சரி சரி. அடுத்த தடவை கவனமா இருக்கேன்.

NONO said...

//குரங்கைக் கேட்டுக்கொண்டா, அது உயிருடன் இருக்கும்போதே மண்டையை உடைத்து மூளையை எடுத்துப் பார்த்து ஆய்வுக்கூடங்களில் சட்டரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன?. எலிகளின் இதயத்தை நோண்டியெடுப்பதும், தவளைகளைக் கூறு போடுவதும் -//

இதெல்லாம்?
//
ஆய்வு கூடங்கங்களில் மிருகங்களை எப்பிடி பராமரிக்கப் படவேண்டும் மற்றும் நடத்தப்பட வேண்டும் என்று சட்ட திட்டங்கள் உண்டு! நீங்கள் சொல்லும் "ஆராச்சிகள்" எதற்காக மேற் கொண்டார்களே எனக்கு தெரியாது, ஆனால் இப்படிப்பட்ட ஆராச்சிகள் தெவையற்றது, அல்லது மாற்று வழிகழை கையாழப்படவேண்டியது!

NONO said...

//நானும் நீலச் சிலுவை உறுப்பினருங்க! நானும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்//

அது என்ன நீலச் சிலுவை? எதாவது sect....?

Sundar Padmanaban said...

//அது என்ன நீலச் சிலுவை? எதாவது sect....?//

பிராணி வதையை எதிர்க்கும் Blue Cross அமைப்பு இருக்கிறதல்லவா? அதைத் தமிழ்ப் படுத்தி "நீலச் சிலுவை" என்று குறிப்பிட்டேன். நான் எந்த அமைப்பிலும் உறுப்பினர் இல்லை. Blue Cross-இன் நோக்கங்களோடு ஒத்துப்போகிறேன். பிராணி வதையைக் கடுமையாக எதிர்க்கிறேன். அவ்வளவுதான்.

Anonymous said...

காமதேனு (பெண் தலை பசு உடல்), நரசிம்மர் (சிங்க முகம் மனித உடல்), சுகமுனிவர் (கிளி முகம் மனித உடல்), ஹயக்ரீவர் (மனித உடல் புலியின் கால்கள்) இந்த கலப்பு சேர்க்கையால் உருவானதா