Friday, March 31, 2006

போலி டோண்டுவும் ஒரு பிரார்த்தனையும்



நேற்று டோண்டு அவர்களின் "இரண்டாம் கல்யாண" பதிவிற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன். இன்று காலை அஞ்சல்பெட்டியைத் திறந்ததும் வந்து விழுந்த மடல்களில் ஒன்று அவருடைய பெயரில் இருக்கவும் ஆர்வத்துடன் திறந்து பார்த்தால் அது உண்மையான போலி டோண்டுவின் "வழக்கமான" மடல். எளிதாக அதைப் புறக்கணிக்க முடிந்தாலும் (மட்டுறுத்தத்தின் தேவையை மறுபடியும் உணரச் செய்த மடல்!), சத்தியமாகச் சொல்கிறேன் - இதை அனுப்பியவரின் மீது பரிதாபம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

இம்மாதிரி மடல்கள் தவறானவை என்பது ஒரு பக்கம். இம்மாதிரி எழுதுவதற்கான மனநிலையைக் கொண்டிருக்கும் அவரையும் அவருடன் இருப்பவர்களையும் நினைத்து உண்மையாகவே கவலையாக இருக்கிறது.

அவரது மன சஞ்சலங்களை நீக்கி, ஆத்திரமும் காழ்ப்புணர்வும் கொப்பளிக்கும் மனதைச் சாந்தப்படுத்தி நல்லெண்ணங்களை விதைக்க எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.

சக வலைப்பதிவர்களும் சேர்ந்து ஒரு குறித்த நாளில் குறித்த நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தால் என்ன என்றும் தோன்றுகிறது.

நன்றி.

45 comments:

நிலா said...

சுந்தர்

இதே மனநிலைதான் எனக்கும் ஏற்பட்டது. நான அவருக்கு சொன்னது இதுதான்:


//சேற்றை அடுத்தவர் மேல் தெளிப்பதாக நினைத்துக் கொண்டு சாக்கடையாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு கண்டிப்பாக மனநல உதவி தேவை. //

தருமி said...

எனக்குக் காலையில் இருந்தே ஒரு வருத்தம். டோண்டுவுக்கு வாழ்த்துவதற்காக இத்தனை பேர் பின்னூட்டம் இட்டுள்ளார்களே. பாவம், இந்த மனுஷன் அத்தனை பேருக்கும் அல்லவா அவர் cut & paste பண்ணணும்.

ஒருவேளை இதை அந்த மனிதர் வாசிப்பாரெனில் அவருக்கு: உங்கள் வழமையான வாசகங்களால் எல்லோரும் திக்கித்து நின்று கவலைப்பட்டதெல்லாம் முடிந்து போச்சுன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். இனிமேயும் அதைத் தொடருணுமா?

Iyappan Krishnan said...

என்னுடைய பிரார்த்தனைகளும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

உங்களுக்காவது பரவாயில்லை, டோண்டு க்கு பின்னூட்டம் போட்டால் தான் வசவு. என் மீது என்ன காட்டமோ தெரியவில்லை வாரம் நான்கு முறை என்று தவறாமல் பார்க்க முடிகிறது.
நிலா நீங்கள் சொன்னது போல அவருக்கு மனநல உதவி தேவை.
பெயரைச் சொன்னால் வாரம் நான்கு என்பது தினமும் ஒன்று என ஆகிவிடும். எனவே எஸ்கேப்...

கால்கரி சிவா said...

சுந்தர்,

எனக்கும் இதே நினைப்புதான் வந்தது. அவர்மேல் கோபம் வராமல் பரிதாபம் தான் வந்த்தது. அவர் சீக்கிரமே குணமடைய நாம் பிரார்த்திற்போம்

சிங். செயகுமார். said...

இதிலும் இவர்களுக்கு ஓர் அல்ப சந்தோஷம் !

Sundar Padmanaban said...

சிங்.ஜெயக்குமார்.

//இதிலும் இவர்களுக்கு ஓர் அல்ப சந்தோஷம் ! //

*இவர்களுக்கு*ன்னா யாரைச் சொல்றீங்கன்னு புரியலையே. எனக்கு அல்ப சந்தோஷமெல்லாம் கிடையாதுங்க. உண்மையாகவே வருத்தமாக இருக்கு. இதை நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்.

நன்றி.

நாமக்கல் சிபி said...

//எனக்குக் காலையில் இருந்தே ஒரு வருத்தம். டோண்டுவுக்கு வாழ்த்துவதற்காக இத்தனை பேர் பின்னூட்டம் இட்டுள்ளார்களே. பாவம், இந்த மனுஷன் அத்தனை பேருக்கும் அல்லவா அவர் cut & paste பண்ணணும்.//

நான் பின்னூட்டம் போடும்போதே நானும் இதைத்தான் யோசிச்சேன்! எனக்கும் சேர்த்து இந்த (போலி)மனுஷன் எத்தனை பேருக்கு பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்குமோன்னு!

பவப்பட்ட மனுஷங்களுக்காக பரிதாபப்பட்டு பிரார்த்தனை பண்ணுறீங்க! நானும் கலந்துக்கறேன்!

துளசி கோபால் said...

ஆமாங்க சுந்தர், இந்த 'செந்தமிழ்ச் செல்வர்' பரிதாபப் படவேண்டியவர்தான்.
இவருக்குப் பயந்துக்கிட்டு நம்ம டோண்டுவுக்கு வாழ்த்தைச் சொல்லக்கூடமுடியாம
இருக்கேன் பாருங்க. என்னத்தைச் சொல்ல?

supersubra said...

உண்மையிலேயே வாரம் ஒரு நாள் வலைப்பதிவர் கூட்டுபிரார்த்தனை நேரம் என்று ஒன்று குறித்து போலி டோண்டுவுக்கு மட்டும் என்று இன்றி இன்றைய உலகின் ஒவ்வொறு ப்ரச்னைக்கும் பிரார்த்தனை நடத்தலாம். எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே என்று உணர்ந்துகொண்ட எல்லா சக வலைப்பதிவாளர்களும் அவரவர் அழைக்கும் தெய்வத்தின் முன் இறைஞ்சுவோம். இதில் நாத்திகர்களும் கலந்து கொள்ளலாம் ஏனென்றால் நல்ல நாத்திகர்கள் மனித நேயம் உள்ளவர்கள்தான்.

துளசி கோபால் said...

இந்திய நேரம் காலை 9.30க்கு ஒவ்வொரு ஞாயிறும் ஏற்கெனவே
ஒரு பிரார்த்தனை நடந்துக்கிட்டுதாங்க இருக்கு.

கூகுள் சித்தம் ( நம்பிக்கை) க்ரூப்லே.

முத்துகுமரன் said...

சுந்தர் உங்கள் பிராத்தனையில் நானும் பங்கு கொள்கிறேன்....

போலிக்கு ஆண்டவந்தான் நல்ல சிந்தனைகளை வழங்க வேண்டும்..

Geetha Sambasivam said...

Count me also in your prayers. I was also affected by him continously for sometime. I have to lock my commentbox to avoid him.Now I am somewhat alright after seeing everybody was affected by him.

dondu(#11168674346665545885) said...

எனது அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி எனக்கு வாழ்த்தனுப்பிய சுந்தருக்கும் மற்ற அன்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

"பெயரைச் சொன்னால் வாரம் நான்கு என்பது தினமும் ஒன்று என ஆகிவிடும். எனவே எஸ்கேப்..."

அனானி அவர்களே, பெயரைச் சொல்லாவிட்டாலும் போலி டோண்டு process of elimination ஐ வைத்து உங்களைக் கண்டு கொள்வானே!

இப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என் தரப்பிலிருந்து போலி டோண்டுவைப் பற்றி இட்டப் பதிவில் பின்னூட்டமிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sundar Padmanaban said...

அன்பின் சதயம்

//அவரை ஒதுக்குவதற்காகத்தான் நீங்கள் அனைவரும் மட்டுறுத்தல் செய்து கொண்டு விட்டீர்களே, பிறகெதற்கு அவருக்காய் இத்தனை கவலைப் படுகிறீர்கள்.அவருடைய பாணியில் அவரது கருத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார் அவ்வளவே...இதற்காக அவருடைய மனநலம் மற்றும் அதற்கான பிரார்த்தனை என்று பேசுவதெல்லாம் அதிகமென்று நினைக்கிறேன்.
//

எந்த ஒரு ஆத்திரக்காரரும் - அவர் சாதாரண மனநிலையில் இருக்கும் போது - இப்படிப்பட்ட உச்சக்கட்ட ஆபாச மடல்களைத் தொடர்ந்து நீண்டகாலமாக - அவரது ஆத்திரத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத எல்லாருக்கும் - ஆண் பெண் வித்தியாசமில்லாது - அனுப்பிக்கொண்டிருக்க மாட்டார். இதை ஒன்றுமில்லாத விஷயமாக நீங்கள் நினைப்பது உங்களது பக்குவத்தைக் காட்டுகிறது. எனக்கும் இது ஒன்றுமில்லை - 'Reject' என்பதை அழுத்திவிட்டுப் போய்க் கொண்டேயிருக்க முடியும்தான். என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

மற்றபடி இந்தப் பதிவில் எந்தவித உள்நோக்கமோ உள்குத்து வெளிக்குத்து வகையறாக்களோ இல்லை என்பதை என் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லிக்கொள்கிறேன். முகம்தெரியாத யாராரோ நலம் பெற வேண்டுமென்று வேண்ட முடிகிறபோது - இவருடைய முகம் பெயர் தெரியாவிட்டாலும் - வலைப்பதிவர் அனைவருக்கும் போலி டோண்டுவாகவாவது அறிமுகமாகியுள்ளவர் என்ற முறையில் - அவரைப் பற்றிக் கவலைப் படுவதில் எனக்கு ஒரு அர்த்தம் இருப்பதற்காகவே படுகிறது.

நன்றி.

Sundar Padmanaban said...

//இந்திய நேரம் காலை 9.30க்கு ஒவ்வொரு ஞாயிறும் ஏற்கெனவே
ஒரு பிரார்த்தனை நடந்துக்கிட்டுதாங்க இருக்கு.
//

துளசிக்கா. இது எனக்குப் புது செய்தி. நல்ல விஷயம். நன்றி.

dondu(#11168674346665545885) said...

சதயம் அவர்களே,
நீங்கள் சுட்டியுள்ள உங்கள் பதிவிலேயே போலி டோண்டு பின்னூட்டமிட்டுள்ளானே. அதைத் தெரிந்தோ தெரியாமலேயோ அனுமதித்திருக்கிறீர்களே. போலி டோண்டு இட்டப் பின்னூட்டம் இதோ:

"11:47 PM Dondu(#4800161) said
அனானிகளை தறுதலைகள் என்று சொல்லிவிட முடியாது. சமீபத்தில் 1857ல் நான் மும்பையில் பணியாற்றியபோது பல அனானிகளைச் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் அன்றாடம் படும் வேதனைகளை நான் பார்த்திருக்கிறேன். இது குறித்து விரைவில் என் வலைப்பூவில் பதிவொன்றை இடுவேன்.

அனானிகள் பார்ப்பனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை எதிர்க்கிறேன். அவர்கள் பார்ப்பனர்களை ஆதரித்து எழுதினால் அதனை நான் வரவேற்கிறேன்."

எலிக்குட்டியை வைத்துப் பார்க்கக்கூட உங்களுக்கு சோம்பல். அதனால்தான் இன்னும் அந்தப் போலிப் பின்னூட்டத்தை இந்த நிமிடம் வரை அப்பதிவில் வைத்திருக்கிறீர்கள்.

சுந்தர் அவர்கள் இப்பதிவில் எழுதியது: "அது உண்மையான போலி டோண்டுவின் "வழக்கமான" மடல். எளிதாக அதைப் புறக்கணிக்க முடிந்தாலும் (மட்டுறுத்தத்தின் தேவையை மறுபடியும் உணரச் செய்த மடல்!), ..."

இவ்வளவு நடந்த பின்னாலும் நீங்கள் இங்கு உங்கள் பின்னூட்டத்தில் கூறுகிறார்கள்: "திரு.டோண்டுவின் பதிவில் பின்னூட்டமிட்டதற்காக என்னையும் ஒரு முறை அவர் பாணியில் கடுமையாக சாடியிறுக்கிறார்."
இதற்குப் பிறகும் போலி டோண்டுவிற்காக வாதாடுகிறீர்கள் என்றால், என்ன செய்வது?

மட்டுறுத்தல் செய்து கொள்ளுங்கள் என்று காசி அவர்கள் எல்லோருடைய நல்லதற்காகவும் கூறியதற்கே உங்கள் சுதந்திரம் பறிபோவதுபோன்ற ரேஞ்சில் செயல் புரிந்த நீங்கள் இங்கு ஒரு மனநலம் பிறழ்ந்தவன் ஒவ்வொருவர் பதிவுக்கெல்லாம் போய் தான் கூறும் ஆசாமியின் பதிவுக்குப் பின்னூட்டம் இடக்கூடாது என்று கூறுவானாம், அதை எதிர்த்து யாரேனும் பேசினால், அந்த மனநலன் குன்றியவனின் கருத்து சுதந்திரத்துக்கு பங்கம் வந்து விட்டது என்று நீங்கள் பொருமுவீர்களாம். என்ன சார் நடக்கிறது இங்கே?

மட்டுறுத்தல் தேவையில்லை என்று நீங்கள் ஒரு நிலை எடுத்தபோது உங்களுக்கு கொம்பு சீவிவிட்ட அனேகம் பேர் பேசாமல் தங்கள் பதிவுகளில் மட்டுறுத்தலை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதையும் பார்த்தீர்கள்தானே. அவர்களில் பலர் தாங்கள் மட்டுறுத்தலை எதிர்த்தது தவறான முடிவு என்று வேறு கூறி விட்டார்கள்.

இப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என் தரப்பிலிருந்து போலி டோண்டுவைப் பற்றி இட்டப் பதிவில் பின்னூட்டமிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sundar Padmanaban said...

சதயம்

சுட்டி கொடுத்தமைக்கு நன்றி. படித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

துளசி கோபால் said...

சுந்தர் ,

இங்கே பாருங்க.

http://groups.google.co.kr/group/nambikkai?lnk=gschg&hl=ko

Anonymous said...

கடைசி செய்தி,

போலியின் தொல்லை முடிவுக்கு வருகிறது

கடைசியாக கிடைத்த தகவல்களின்படி சென்னை சைபர் செல்,யு.எஸ், மலேசிய மற்றும் சிங்கப்பூர் அத்தாரிட்டிகளுடன் சேர்ந்து போலியின் மூவ்மெண்ட்டை கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த இரு நாட்களாக அவர் இட்ட பின்னூட்டங்கள் அனைத்தும் பிளாக்கர் கம்பெனியின் மூலமாக அவர்கள் பெற்றுவிட்டனர்.இன்னும் சில நாட்களில் பரபரப்பு திருப்பங்களை எதிர்பாருங்கள்.

dondu(#11168674346665545885) said...

"தமிழ் வலைப்பதிவுகளில் உங்களைக் கதாநாயகனாக ஆக்கிய அந்தப் போலி காமெடியன் or வில்லனுக்கு நீங்கள் கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். :)."

எல்லாம் கலந்த உணர்வாக இருக்கிறது. உதாரணத்துக்கு கூகளில் "டோண்டு" என்று தமிழில் தட்டச்சு செய்து சர்ச் பித்தானை அமுக்கினால் சுமார் 14000 ஹிட்ஸ்கள் வருகின்றன. நான் பார்த்தவரை கிட்டத்தட்ட அத்தனையிலும் டோண்டு அல்லது போலி டோண்டு வருகின்றனர்.

ஆனால் அதற்காக நன்றி? ஒன்று மட்டும் கண்டிப்பாகக் கூற வேண்டும். இது போலி டோண்டுவின் ஒரிஜினல் நோக்கத்துக்கு மாறானது என்பதுதான் அது.

இப்பதிவையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என் தரப்பிலிருந்து போலி டோண்டுவைப் பற்றி இட்டப் பதிவில் பின்னூட்டமிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

போலி நலமடைய பிராத்தனை செய்யும் அனைவருக்கும்,

உங்கள் பிராத்தனை நிறைவேற பிராத்தனை செய்கிறேன்.

பிராத்தனை மட்டும் போதுமா? அவருக்கு ஒரு மருந்து கொடுப்போம் வாருங்கள்.

1) உங்களுக்கு வந்துள்ள "செந்தமிழ்" பின்னூட்டத்தில் உள்ள ப்ளாக்கர் ப்ரொபைல் சென்று அவரின் வலைப்பதிவுகளை சுட்டுங்கள்.
2) அந்தப் பதிவுகளுக்கு சென்று பதிவின் மேலுள்ள ப்ளாக்கர் நேவிகேசன் பாரில் வலதுபுறம் இரண்டாவதாய் இருக்கும் "FLAG"ஐ அழுத்துங்கள்.
3) செய்யப்பட்ட பதிவுகளை ப்ளாக்கர் தொடர்ந்து "கவனித்து" "தேவை"யான நடவடிக்கையை எடுக்கும்.

அமெரிக்க, இந்திய குற்றவியல் சட்டங்களின்படி அவர் பதிவில் எழுதியிருக்கும் இடுகைகள் ஜாதி மத துவேஷங்கள் என்பதால் தண்டனைக்குறிய குற்றங்களாகிறது.

மேல் விவரங்களுக்கு:
What is Flag?

Anonymous said...

1) பிடிக்காதவர்கள் தனிப்பட்ட விரோதம் காரணமாய் உங்கள் வலைப்பதிவு FLAG செய்யபட்டால் என்ன செய்யலாம்?

கவலைப்படாதீர்கள், FLAG செய்யப்பட்ட பதிவுகள் தொடர்ந்து ப்ளாக்கரால் கவனிக்கப்பட்டு உண்மையில் ஆட்சேபத்துக்குறியதாயும் ப்ளாக்கர் TOCக்கு எதிரானதாகவும் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்கும்.

2) போலி, Hacking மூலம் அந்த பதிவின் ப்ளாக்கர் நேவிகேசன் பாரை நீக்கிவிட்டால் என்ன செய்யலாம்?

ஒன்றுமே செய்யத் தேவையில்லை.
"ப்ளாக்கர் நேவிகேசன் பார்" நீக்கப்பட்ட பதிவு ப்ளாக்கர் TOCயின் படி கேள்வியின்றி நீக்கப்படும்.

3) போலி, வலைப்பதிவே இல்லாமல் இருந்தால் என்ன செய்வது?

அவருக்கு வலைப்பதிவே இல்லைன்னா அவருடைய செயல்களை எப்படி வெளியே தெரிவிப்பார். அதனால கண்டிப்பா அவர் வலைப்பதிவு வச்சிக்குவார்.

Pot"tea" kadai said...

நானும் தான் டோன்டுவுக்கு வாழ்த்து சொன்னேன்.ஆனால் போலி டோன்டு என்னை கேடுகெட்ட மொழியில் திட்டவில்லையே!
அப்போ நான் தான் போலி டோன்டுன்னு சொல்லுவீங்களோ!
நான் சமீப காலங்களில் போலி டோன்டுவை பார்த்ததில்லை. ஒரு சக வலைபதிவாளரை எல்லோரும் குறி வைத்து தாக்கிக் கொண்டு இருக்கையில் சில பன்னாடைகள் வெளிப்படையாக சக வலைபதிவாளர்களை குறி வைத்து தாக்குவதை நியாயம் என்கிறீர்களா?
இல்லை அவர்களை கட்டுப்படுத்த இயலாது என்கிறீர்களா?
நான் முகமூடியும் அணிந்து வரவில்லை, வேறு ஒருவர் பெயரிலும் வரவில்லை...
அதே நேரம் இன்னபிற துணிவில்லாத நாதாரிகளும் வெளிப்படையாகத் தன் சொந்தப் பெயரி வரும் வகையில் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

Anonymous said...

If you are really concerned and all of you are really responsible netizens please do the following:

1. Send complaints to the blogger to support@blogger.com telling the serious nature of the abusing feedbacks/comments/emails that you receive. Send a complaint mail for each comment that you receive stating the exact date and time of those posts.

2. In your mail, send a copy of the comment if possible with a translation (I know it will be tough) to translate such a coarse language. Still that will convince the bloggers to go to the root.

3. Insists that this person is doing blackmailing, impersonating, open threats and character assasination. Tell that how much mental torture he is causing on you, the agony that you are undergoing etc etc. Put all possible charges.

4. Flag his blog

5. Relentlessly follow with Blogger each time he does this and keep a file of all your complaint mails. If possible copy your mail to real dondu also as he is doing in his name.

6. Like a Mayil Ravanan he will come up again with another id and continue to do this. But he is now being watched and they cornered to the extent his source it seems. So please put as much pressure with Blogger. Blogger can be even sued as he is causing mental harrasments to so many innocent victims using their resources.

I am doing the above for each comment that I receive from him. This person is writing all these from Malyasia and known to most of the bloggers here. It is the duty/responsibility for each and every decent blogger here to fight against this terrorism. Sundar's advice of prayer and all can not work with this psycho. More severe actions are needed, he knows what he does. Please dont give him the benefit of mental retardness to him. He is a criminal and should be handled what he desreves.

Best Of Luck

Anonymous said...

//3) செய்யப்பட்ட பதிவுகளை ப்ளாக்கர் தொடர்ந்து "கவனித்து" "தேவை"யான நடவடிக்கையை எடுக்கும்.//

3) FLAG செய்யப்பட்ட பதிவுகளை ப்ளாக்கர் தொடர்ந்து "கவனித்து" "தேவை"யான நடவடிக்கையை எடுக்கும்.

//It came from Melaka region of malasia through a different country server.//

From where it comes, who does this etc., will be taken care of by Blogger.

:-)

Please don't forget to "FLAG" the blog.

Anonymous said...

Thanks for the "flag" information. I flaged his blog.

Anonymous said...

ஆகா கிளம்பிட்டன்ன்யா கிளம்பிட்டன்ன்யா, டோண்டுக்கு என்ன ராசியோ தெரியல. தொட்டதெல்லாம் துலங்குதைய்யா. process of elimination ன்னு சொன்னாரு, அது ஒரு பெரிய விசயமாகி விளமபரமாகி விட்டது. எல்லாம் மச்சம்யா. :-))))
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

Sundar Padmanaban said...

பெரியவர் காலையில் எழுந்ததும் டீ குடிக்கிறாரோ இல்லையோ சில "மங்களகரமான" மடல்களை அனுப்பிவிட்டுத்தான் பல்லே தேய்ப்பார் போலிருக்கிறது.

அன்னாரிடமிருந்து நேற்று இரண்டு "வழக்கமான" மடல்கள்.

மனிதருக்கு உண்மையிலேயே அசாத்தியமான பொறுமை இருக்கிறது. நிதானமின்றித் துள்ளும் ரப்பர் பந்தைப் போல மனநிலையுடன்.

இலவசக்கொத்தனார் said...

நண்பர் டோண்டு (போலி), அவர்தன் வழக்கமான பாணி பின்னூட்டங்கள் இரண்டு அனுப்பியுள்ளார். பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் நண்பரே. நான் பெரியவர் டோண்டுவிற்கு (ஒரிஜனல்) வாழ்த்து சொன்னதற்காக எனக்கு போலியின் பின்னூட்டம்.

இவரின் அருமையான தமிழுக்கு பயந்து நான் எனக்கு வேண்டும் என்கிற பதிவுகளுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என தெரிவிக்கவே இப்பின்னூட்டம்.

இதை நான் எனது சமீபத்திய பதிவின் (http://elavasam.blogspot.com/2006/03/voipstunt.html) பின்னூட்டத்திலும் பதிவு செய்திருக்கிறேன்.

Anonymous said...

//பெரியவர் காலையில் எழுந்ததும் டீ குடிக்கிறாரோ இல்லையோ சில "மங்களகரமான" மடல்களை அனுப்பிவிட்டுத்தான் பல்லே தேய்ப்பார் போலிருக்கிறது.//

போலி manual ஆக ஏதேயும் அனுப்புவதாகத் தெரியவில்லை. டோண்டுவின் பின்னூட்டங்களைத் திரட்ட ஏதோ ஒரு program வைத்துள்ளார் போலும். எனவேதான் நீங்கள் எத்த்னை பின்னூட்டம் இடுகிறீர்களோ அத்தனை 'வாழ்த்து' மடல்கள்

Anonymous said...

////போலி manual ஆக ஏதேயும் அனுப்புவதாகத் தெரியவில்லை. டோண்டுவின் பின்னூட்டங்களைத் திரட்ட ஏதோ ஒரு program வைத்துள்ளார் போலும்.////

எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. அந்த சைக்கோ வேறு வேலைவெட்டி இல்லாத ஆளாய் இருக்குமோ என்று தோன்றுகிறது. உருப்படியாய் வேறு வேலை இருக்கும் ஒரு ஆளால் இப்படி உப்புச்சப்பிலாத மேட்டருக்கு இவ்வளவு சிரத்தை எடுத்து, டோண்டு அவர்களின் வலைப்பதிவைத் தினம் விழுந்து விழுந்து படித்து, அங்கு பின்னூட்டமிடும் ஒவ்வொரு வலைப்பதிவரின் வலைப்பதிவுக்கும் சென்று இப்படி வெட்டியாய் கிறுக்குத்தனமாய் நேரம் செலவழிக்க முடியாதே. அது சரி. சைக்கோக்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதில்லையே. :-))

இலவசக்கொத்தனார் said...

//போலி manual ஆக ஏதேயும் அனுப்புவதாகத் தெரியவில்லை. //

அதெல்லாம் இல்லீங்க. எனககு அவர் அனுப்பும் மடல்கள் எல்லாமே ரொம்ப பெர்ஸனலைஸ்ட். அவர் அதெல்லாம் பாத்து பாத்துதான் பண்ணறாரு.

Anonymous said...

இங்கே அனானிமசாக பல பதிவுகளை எழுதிவரும் முகமூடி ************* ஏன் தனது நவ்பாரை தூக்கினார் என்று நாங்கள் அறிந்து கொள்ளலாமா?

--பின்னூட்டத்தில் வரம்பு மீறிய வார்த்தைகளை நீக்கியிருக்கிறேன்-சுந்தர்--

Anonymous said...

//எல்லாமே ரொம்ப பெர்ஸனலைஸ்ட். அவர் அதெல்லாம் பாத்து பாத்துதான் பண்ணறாரு.//
அய்ய கொத்தனாரெ, அதெல்லாம் படிக்கிறீங்களா? நானெல்லாம் previewல் முதல வரியைப் பார்த்தவுடனே reject தான்.

Anonymous said...

சில பேர் மூர்த்தின்னு ஒருவர் மலேசியாவில் இருந்து போலி டோண்டுவாக எழுதுவதாகச் சில பேர் சொல்லிக் கேட்டுள்ளேன்.

Anonymous said...

////சில பேர் மூர்த்தின்னு ஒருவர் மலேசியாவில் இருந்து போலி டோண்டுவாக எழுதுவதாகச் சில பேர் சொல்லிக் கேட்டுள்ளேன்.///

இது மிகவும் யோசிக்கப்படவேண்டியது. பலரும் அந்தப் பின்னூட்டங்கள் மலேசியாவில் இருந்து வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மேலேயேகூட சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

///இந்த போலியான ஆளின் பெயர் தனசேகர், ஷார்ஜாவில் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்கிறார். ///

இப்படி ஏதோ ஒரு தனசேகர் பெயர் சொல்வது திசைதிருப்பும் வேலையாக இருக்கலாம். உண்மையில் இந்தப் போலி தமிழ்வலைப்பதிவில் நன்கு பரிச்சயமான ஆளாகத்தான் இருக்க வேண்டும். மேலும் பலரும் மலேசியாவில் இருந்து வருவதாய்ச் சொல்வதால் ஷார்ஜாவில் இருந்து பதிகிறார் என்று சொல்வது சரியாய்ப்படவில்லை.

Sundar Padmanaban said...

////போலி manual ஆக ஏதேயும் அனுப்புவதாகத் தெரியவில்லை. //

ஒவ்வொன்றாகப் "பார்த்துப் பார்த்து"தான் எழுதி அனுப்புகிறார். இன்றும் இங்கு பின்னூட்டமிட்டுள்ள நண்பர்களைத் தாக்கி எழுதி இரண்டு மடல்கள் வந்தன.

Anonymous said...

\\இப்படி ஏதோ ஒரு தனசேகர் பெயர் சொல்வது திசைதிருப்பும் வேலையாக இருக்கலாம்.\\

இருக்கலாம் இல்லை. உண்மை அது தான். சாநக்கியன் என்ற பெயரிலும் வரும் பாருங்கள் :)

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்குமாம்..

இவர் புகழைப் பாடி நம் வாய் மணக்க செய்வானேன். just ignore these kind of species.

tried reading the link given there


நரகத்திடைப்பட்டுழலும் இந்த மனிதருக்காக அவரின் மனைவி தான் பிரார்த்திக்க வேண்டும். அதுவும் இல்லாமல் இவரின் இல்வாழ்க்கை மிகவும் வேதனைக்குறியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தன்னால் இயல்பில் முடியாததை இப்படி வார்த்தையால் பிறரின் மேல் கொட்டித் தீர்த்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

இதற்காக எனக்கு சில அர்ச்சனைப் பூக்கள் கிட்டலாம்.. சர்வம் கிருஷ்ணார்ப்பனம் போல.. அந்த மனிதர் சொன்னவை, சொல்பவை சொல்லப்போகின்றவை எல்லாம் அவரின் குடும்பத்தை சேர்ந்தப் பெண்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.


ரத்னம்

Anonymous said...

///இருக்கலாம் இல்லை. உண்மை அது தான். சாநக்கியன் என்ற பெயரிலும் வரும் பாருங்கள் :) ////

சாணக்கியன் நல்ல பெயர்தான். எத்தனை எத்தனை பெயர்களடா? சிவனைஅடிப்போர், வெங்காயம், பல்லாரி, கறுப்பையா இன்னும் எத்தனையோ?. எந்தப் பெயரில் வந்தாலும் அந்த துர்வாசனை காட்டிக்கொடுத்துவிடுகிறதே ;-)).

Anonymous said...

Tamil Reel's response... (I've removed the URLs as suggested by Raghunandha kumar - Sundar)

நான் முதலில் சொன்னது போல இந்த போலி டோண்டு தான் தனசேகரன் என்று புரிந்து கொள்ள இந்த இரண்டு முகவரிகளையும் பார்கவும் !!

1.
Doondu's dos and donts: <<>>

2.

<<>>

இந்த போலி டோண்டு தன்சேகரன் பதிவுகளை நான் பல நாட்களாக thatstamil.com , sysindia.com போன்ற தமிழ் களில் பார்த்து இருக்கிறேன். தற்போது கூட வேறு சில போலி முகவரிகளில் Sysindia.com தளத்தில் கருத்து (?) பதிந்து வருகிறார் இந்த போலி !! ***.com தளத்தில் fake id செய்வது வெகு சுலவும். cokkies கண்டு பிடித்து அதில் பதிந்து உள்ள login id மாற்றி விட்டால் வெகு சுலபமாக வேறு ஒரு நபர் பெயரில் கருத்து பதியலாம். இந்த தில்லு முல்லுகளை தெளிவாக அறிந்துள்ள நமது போலி அந்த தளத்தை வெகு சுலபமாக அழித்து விட்டார். தற்போது தளத்தில் யாரும் வருவதில்லை. காரணம் உங்களுக்கே புரிந்து இருக்கும்.

Fri Apr 07, 11:56:40 AM 2006

Sundar Padmanaban said...

ரகுநந்தா குமார்.

//மேலே அந்த ஆபாசப் பதிவிற்கு இணைப்பினைக் கொடுத்திருக்கும் நோக்கம் அதைப்பற்றி பலருக்கும் தெரியச் செய்வதற்காக என்றுதான் தோன்றுகிறது. சுந்தர், முடிந்தால் அந்த சுட்டியை உங்கள் தளத்திலிருந்து எடுத்துவிடலாமே.
//

Tamil Reel-இன் பின்னூட்டத்திலிருந்த சுட்டிகளை எடுத்துவிட்டு, பின்னூட்டத்தை மட்டும் மறுபடியும் இட்டிருக்கிறேன். பழைய பின்னூட்டத்தை அழித்துவிட்டேன் - எப்படி Edit மட்டும் செய்வது என்று தெரியாததால்.

யோசனைக்கு நன்றி.

Anonymous said...

sundar,

can you please remove the link which Boli had given(it is at the bottom after the comment section in this post. it is going to that physco Bolis blog...

Ramesh

Anonymous said...

///sundar,
can you please remove the link which Boli had given(it is at the bottom after the comment section in this post. it is going to that physco Bolis blog...
///
in the comment section of this blog if you selct "hide" for "back links" then publish the blog will remove the back links.
-rajan rajah

Anonymous said...

remove this link in the bottom of your blog

முகமூடியின் புது ஐடியா!