Friday, June 15, 2007

சும்மா... இல்லை, வலித்து அதிருகிறது இதயம்!

யானை ஊர்வலம் என்ன;
மொட்டை அடித்துக் கொள்வதென்ன;
கட்டவுட்டுக்குப் பாலபிஷேகம் என்ன;
பட்டாசு வெடிப்பதென்ன;
பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள் என்ன;

எல்லாம் சரிதான். உங்கக் கைக்காசைப் போட்டு என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க. ஆனா இது?

Image and video hosting by TinyPic

ரசிப்புத்தன்மை இருப்பவன் ரசிகன். மேலிருக்கும் படத்தைப் பார்த்தால் நீங்கள் ரசிக்கும் விஷயங்கள் மீது சந்தேகமாக இருக்கிறது.

அடுத்து தசாவதாரம் வெளியீடன்று என்னென்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. கமல் ரசிகர்கள் இம்மாதிரி செய்ய மாட்டார்கள் என்ற நினைப்பில் மண்... ஸாரி.. இடி விழுந்து நீண்ட நாட்களாகிற்று. எனக்கென்னவோ இது ஒருவகையான மனோவியாதி என்று தோன்றுகிறது.

இதையெல்லாம் பார்த்தாலே.... சும்மா... இல்லை, வலித்து அதிருகிறது இதயம்!

12 comments:

Thekkikattan|தெகா said...

காட்டுத்தனத்தின் உச்சக்கட்டம்... :-(

Sundar Padmanaban said...

தெகா.

ரொம்ப கஷ்டமாயிடுச்சு இந்தப் படத்தைப் பாத்து. அதுவும் ஆட்டுக்குட்டி.

ஒருத்தரு ஓரத்துல கையால பாபா ஸ்டைல் முத்திரை காமிக்கறாரே. எனகென்னவோ அந்த ஆட்டுக்குட்டியோட தலைதான் அந்த முத்திரைல தெரிஞ்சது. :-(

Anonymous said...

சுப்பர் ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை.
கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வெளிவந்த சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான் ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது சிவாஜிராவ் நம்ம பையன் அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள் அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.

Sundar Padmanaban said...

அனானி,

சிவாஜி திரைப்படத்தைப் புறக்கணியுங்கள் என்ற பதிவிலிருந்து சில பத்திகளை இங்கே பின்னூட்டமாக இட்டிருக்கிறீர்கள். நீங்கள்தான் அந்தப் பதிவரா அல்லது அந்தப் பதிவிலிருந்து வெட்டிய ஒட்டும் அனானியா என்று எனக்குத் தெரியாது.

நான் பிரச்சினையை கலைஞர்களிடம் காணவில்லை. வாழ்வில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கையில் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியங்களில் 'ரசிகன்' என்ற பெயரில் செய்வதுதான் அசிங்கமாக இருக்கிறது.

கலைஞர்களோ கலையோ இல்லாத சமூகம் எது? சினிமாக் கலைஞர்களும் நமக்குத் தேவை. கலையில் இனம், மதம், மொழி போன்ற பாகுபாடுகளைப் புகுத்திக் கலைஞர்களை அடையாளம் காணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரஜினி ஒரு பெரும் ரசிகப் படையை வைத்திருக்கும் ஒரு நடிகர். ஆனால் ரசிகர்கள் அறிவுகெட்டத்தனமாகச் செய்யும் இம்மாதிரியான கூத்துகள் சகிக்கமுடியாதவை. இதைக் கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தும் பொறுப்பு கலைஞனுக்கு உண்டு. ஆனால் ரசிகன் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டிய விஷயம் இது. சாலையில் குப்பை இருந்தால் சுத்தம் செய்வது அரசு இயந்திரத்தின் கடமை. ஆனால் சாலையில் குப்பை போடாமலிருப்பது குடிமக்களின் முதற்கடமை அல்லவா? அது போல.

அவர் கன்னடத்தையும் கர்நாடகாவையும் ஆதரிக்கட்டும். அங்கு முதலீடு செய்யட்டும். அது அவர் சொந்த விஷயம்.

ரசிகர்களாக அவரது நடிப்பைப் பார்த்து படங்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் - மொட்டை போடுவது, பலி கொடுப்பது, பாலபிஷேகம் செய்வது எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதில் ஈடுபடவேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

அவரது சொத்துகளும், முதலீடுகளும், அமைப்பு சார்பும் அவரது சொந்த விஷயங்கள்.

ரசிகர்கள் அளவோடு ரசித்து, அதீதமாகச் செய்யும் முட்டாள்த்தனங்களை நிறுத்தினால் மதி! அஷ்டே!

கொழுவி said...

நல்ல வேளைப்பா... நரபலி எடுத்தால் படம் பிச்சுக்கிட்டு ஓடும் என்று யாரும் அவங்களிடம் சொல்ல வில்லை. அதை மட்டும் சொல்லிப் பாருங்க.. என்னை வெட்டு என்னை வெட்டு என்று ஆயிரம் பேர் வந்து கியுவில் நிற்பார்கள்.

Sundar Padmanaban said...

கொழுவி,

//என்னை வெட்டு என்னை வெட்டு என்று ஆயிரம் பேர் வந்து கியுவில் நிற்பார்கள்.
//

அப்டீன்னாகூட பரவாயில்லை. 'இவனை வெட்டுடா' என்று பக்கத்துல நிக்கறவங்களைப் போட்டுத் தள்ளிட்டா..

வேணாம். பீதியைக் கெளப்பாதீங்க.

நளாயினி said...

கொழுவி உங்களுக்கு எப்பிடித்தான் இப்பிடி எலஇலாம் ஐடியா வருதோ.

நளாயினி said...

கொழுவி said...
நல்ல வேளைப்பா... நரபலி எடுத்தால் படம் பிச்சுக்கிட்டு ஓடும் என்று யாரும் அவங்களிடம் சொல்ல வில்லை. அதை மட்டும் சொல்லிப் பாருங்க.. என்னை வெட்டு என்னை வெட்டு என்று ஆயிரம் பேர் வந்து கியுவில் நிற்பார்கள்.

கொழுவி உங்களுக்கு எப்பிடித்தான் இப்பிடி எலஇலாம் ஐடியா வருதோ.$


"வற்றாயிருப்பு" சுந்தர் said...
கொழுவி,

//என்னை வெட்டு என்னை வெட்டு என்று ஆயிரம் பேர் வந்து கியுவில் நிற்பார்கள்.
//

அப்டீன்னாகூட பரவாயில்லை. 'இவனை வெட்டுடா' என்று பக்கத்துல நிக்கறவங்களைப் போட்டுத் தள்ளிட்டா..

"நல்லாத்தான் பயப்பிடுறீங்க."

Sundar Padmanaban said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நளாயினி அவர்களே. உங்கள் வலைப்பதிவு ஓவியம், கவிதை என்று அழகான வண்ணக் கலவையாக, அழகாக இருக்கிறது. உங்களுக்குக் கவிதைகள் பிடிக்குமெனில், நேரம் கிடைக்கையில் என் கிறுக்கல்களை இங்கே http://akavithaikal.blogspot.com படித்து கருத்து சொல்லுங்கள்.

நன்றி.

Anonymous said...

//அப்டீன்னாகூட பரவாயில்லை. 'இவனை வெட்டுடா' என்று பக்கத்துல நிக்கறவங்களைப் போட்டுத் தள்ளிட்டா..//

அதெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிச்சு, ஆட்சியை பிடிச்சு, ரெண்டு பசங்களுக்குள்ளே சண்டை வந்து, குறுக்காலே அக்கா பேரன்கள் புகுந்தா நடக்கிற கதை.

அப்புறம், ஆட்டை அப்படியே முழுங்குறவங்க எல்லாம் காட்டுத்தனம் அப்படீன்னு பில்டப்பு பின்னூட்டம் கொடுக்கிறது முறைநகை.

கமல் ரசிகர்கள்(அப்படின்னு இருக்காய்ங்களா?) இப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள்ன்னு ஒரு பில்டப்பு வேற. யாருய்யா அப்படியெல்லாம் சர்டிபிகேட் கொடுத்த ஆபீசரு? நீங்களா ஒரு இமேஜு..கமல் ரசிகன்னா பெரிய அறிவு ஜீவின்னு தானாவே சொல்லிக்க வேண்டியது. மத்ததுக்கு எல்லாம் மட்டும் பெரும்பான்மை வேணும்னு சொல்றீங்க. ரஜினி படத்தை பெரும்பான்மையான மக்கள் ரசிக்கிறாங்க. அது போதும். டுபாக்கூர்களோட கத்தல் எல்லாம் தேவையே இல்லை. வயிற்றெரிச்சலை அடக்க ஜெலுசில் குடிக்கவும்.

Sundar Padmanaban said...

அனானி,

//அதெல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிச்சு, ஆட்சியை பிடிச்சு, ரெண்டு பசங்களுக்குள்ளே சண்டை வந்து, குறுக்காலே அக்கா பேரன்கள் புகுந்தா நடக்கிற கதை.
//

:-)) :-))

//கமல் ரசிகர்கள்(அப்படின்னு இருக்காய்ங்களா?) இப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள்ன்னு ஒரு பில்டப்பு வேற. யாருய்யா அப்படியெல்லாம் சர்டிபிகேட் கொடுத்த ஆபீசரு?//

இருக்காய்ங்கண்ணே! இப்படியெல்லாம் இருக்கமாட்டாய்ங்கன்னு நெனச்சது மூட நம்பிக்கைன்னு புரிஞ்சு நாளாச்சுண்ணே! எல்லா ரசிகக் கண்மணிகளும் விதிவிலக்கு இல்லாம இந்த விஷயத்துல ஒண்ணாத்தேன் இருக்காய்ங்க.

//ரஜினி படத்தை பெரும்பான்மையான மக்கள் ரசிக்கிறாங்க. அது போதும்.//

ரொம்ப சரி. என் குட்டிப்பொண்ணு துர்கா என்ன குதி குதிப்பான்னு எனக்குத்தான் தெரியும். ரசித்துச் சந்தோஷப்பட வேண்டிய நடிகர் ரஜினி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

//டுபாக்கூர்களோட கத்தல் எல்லாம் தேவையே இல்லை. வயிற்றெரிச்சலை அடக்க ஜெலுசில் குடிக்கவும். //

என்னமோ சொல்றீங்க. இது என்னன்னு புரியலை. இருக்கட்டும்.

எந்த நடிகராக இருந்தாலும் ரசிப்பதோடு வைத்துக்கொண்டு இம்மாதிரி மடத்தனமாகச் செய்யவேண்டாம் என்பதுதான் என் கருத்துவது. கட்டவுட்டுக்குப் பாலபிஷேகம் செய்வதற்குப் பதிலாக பசியிலிருக்கும் இல்லாதவர்களுக்குச் சோறு வாங்கிக் கொடுக்கலாம். (வெயிட். இதே எண்ணம் கோவில்களில் சிலைகளுக்குப் பாலாபிஷேகம் செய்யும்போதும் தோணும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்).

உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

என்ன கொடுமை சுந்தர் இது!!!!!!!