Sunday, June 29, 2008

நாட்டையாளும் புழுக்களும் சொரணையற்ற நாமும்!


செய்தி: தமிழ்முரசு.காம்

நாட்டைக் காத்த மானக்ஷாவின் இறுதி அஞ்சலி

வி.ஐ.பி. அரசியல்வாதிகள், முப்படை தளபதிகள் "மிஸ்ஸிங்"

நன்றி மறவாத வங்கதேசம்


பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் (Sam Hormusji Framji Jamshedji Manekshaw) இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று முன்தினம் இறந்தார்.



நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை. ஏன், நமது நாட்டின் முப்படைத் தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில் மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில் ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல்பலர் இருந்து விட்டனர்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.
இது குறித்து ராணுவ பிரிகேடியர் ஒருவர் கூறுகையில், "நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விடுகிறார்கள்" என்றார்.

****

அவமானமாக உணர்கிறேன்! :(

14 comments:

சின்னப் பையன் said...

நிஜமாகவே வருத்தமும்/ஆத்திரமும் தரக்கூடிய செய்திதான்....:-(((((

இரண்டாம் சொக்கன்...! said...

உங்களின் வருத்தமும் கோபமும் நியாயமானதே...

சாம் பஹாதூர் என பக்தியுடன் அழைக்கப்பட்ட அந்த மாமனிதர், ராணுவ புரட்சியின் மூலமாய் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டினார் என்கிற செய்தி சமீபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது முதல் அதிகார மய்யம் அவரிடம் இருந்து விலகி நிற்க ஆரம்பித்ததன் நீட்சியே அவரின் இறுதிச்சடங்கில் எதிரொலித்தது.

ஆனாலும், இதையெல்லாம் மீறி தமிழக அரசு மட்டும் நேற்று ஒரு நாள் அடையாள துக்கம் அனுஷ்டித்ததும், கொடிகள் அரைகம்பத்தில் பறக்கவிட்டதும், நீலகிரி மாவட்டம் முழுமையும் விடுமுறை அளிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இரண்டாம் சொக்கன்...! said...

உங்களின் வருத்தமும் கோபமும் நியாயமானதே...

சாம் பஹாதூர் என பக்தியுடன் அழைக்கப்பட்ட அந்த மாமனிதர், ராணுவ புரட்சியின் மூலமாய் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டினார் என்கிற செய்தி சமீபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது முதல் அதிகார மய்யம் அவரிடம் இருந்து விலகி நிற்க ஆரம்பித்ததன் நீட்சியே அவரின் இறுதிச்சடங்கில் எதிரொலித்தது.

ஆனாலும், இதையெல்லாம் மீறி தமிழக அரசு மட்டும் நேற்று ஒரு நாள் அடையாள துக்கம் அனுஷ்டித்ததும், கொடிகள் அரைகம்பத்தில் பறக்கவிட்டதும், நீலகிரி மாவட்டம் முழுமையும் விடுமுறை அளிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

SurveySan said...

//25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விடுகிறார்கள்" என்றார். //

hmm. :(

கிரி said...

ரொம்ப வருத்தமான செய்தி. இதை போல பல செய்திகளை கேட்பதால் ஜீரணிக்க பழகி கொண்டேன்.

Sundar Padmanaban said...

இரண்டாம் சொக்கன்

//இதையெல்லாம் மீறி தமிழக அரசு மட்டும் நேற்று ஒரு நாள் அடையாள துக்கம் அனுஷ்டித்ததும், கொடிகள் அரைகம்பத்தில் பறக்கவிட்டதும், நீலகிரி மாவட்டம் முழுமையும் விடுமுறை அளிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.//

இந்த அளவாவது ஏதோ செய்தார்களே என்று ஆறுதல்படக்கூட முடியவில்லை! :((

கட்சி எம்மெல்லே செத்தால்கூட இதைத்தான் செய்வார்கள்.

I think all of us grossly failed to recognize the magnitude of his contribution to the country.

பாரதி இறுதி ஊர்வலத்திற்கு நாலைந்து பேர்தான் வந்தார்களாம். அவர் புரட்சிக் கவி.

இவர் நாட்டைக் காத்தவர் - அந்தப் போரில் தோற்றிருந்தால்?

Sundar Padmanaban said...

கிரி

//இதை போல பல செய்திகளை கேட்பதால் ஜீரணிக்க பழகி கொண்டேன்.//

ஜீரணிக்க முடியலைங்க! போலீஸ் வேலையில் சேரும் முன்/பின் என்பது பத்தி நீங்க எழுதுன பதிவுல நீங்க குறிப்பிட்டிருந்தது "நம்மவர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்."

I don't think so!

என்னமோ போங்க! :(

கிரி said...

//ஜீரணிக்க முடியலைங்க! போலீஸ் வேலையில் சேரும் முன்/பின் என்பது பத்தி நீங்க எழுதுன பதிவுல நீங்க குறிப்பிட்டிருந்தது "நம்மவர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.//

நான் நம்மவர்கள் என்று குறிப்பிட்டது பொது மக்களை தான் சுந்தர், அரசியல்வாதிகளையோ அல்லது அதிகாரிகளையோ அல்ல. அந்த பதிவில் காவலர்களையும் ராணுவ வீரர்களையும் ஒப்பிட்டு கூறி இருந்தேன். பொதுமக்களுக்கு இவரை பலருக்கு யார் என்றே தெரியாது, மன்னிக்கவும் எனக்கே யார் என்று தெரியாது. கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் விவரம் தெரியாது.

//I don't think so! //

நீங்கள் நினைப்பது சரி தான் சுந்தர்.

நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அடுத்தவர்களுக்கு ஜால்ரா அடித்தே பழகி விட்டார்கள், உண்மையான கொடுக்கப்படவேண்டிய மரியாதையை கேட்டு பெற வேண்டியதே இன்றைய நிலை. அதுவும் இவரை போன்ற சாதித்தவர்களை இவர்கள் இதை விட கேவலபடுத்த முடியாது.

எனக்கு அரசியல்வாதிகள் அவ்வாறு செய்ததை கூட ஒரு கணக்கில் சேர்த்துக்கொள்ள முடிகிறது, இந்த முப்படை அதிகாரிகள் செய்தது தான் மனசு கேட்கலை. கஷ்டப்பட்டவர் கூட இருந்தவர்களுக்கே அதன் அருமை தெரியாத போது அல்லது மதிக்க தெரியாத போது ஒன்றுமே தெரியாமல் அரசியலில் குப்பை கொட்டி கொண்டு இருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?

கிரி said...

இந்த தொடுப்பு இன்னும் இவரை பற்றி தெரிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0628-salute-to-sam-bahadur-manekshaw.html

Sundar Padmanaban said...

கிரி

சுட்டிக்கு மிக்க நன்றி. இம்மாதிரி நேர்மையும், துணிச்சலும், சாதுர்யமும் நிறைந்தவர்களால் தேசத்தின் மிச்சம் மீதி மானமும் போகாமலிருக்கிறது.

சாம் பகதூருக்கு ஒரு ராயல் சல்யூட்!

Anonymous said...

சுந்தர்,

கார்கில் போர் வந்த்தப்ப நம்மள மாதிரி தேசபக்தி உள்ளவன் எவனும் கிடையாதுங்றமாதிரி ஒரு் பில்டப். நாளிதழ், TV எல்லாத்திலயும் தேச பக்தி கரை புரண்டு ஒடுச்சு.

ஒட்டு மொத்த தேசமே தேச பக்தி ஜுரம் புடிச்சுக் கிடந்தது.

கொஞ்ச நாள்தான் கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிச்ச உடனே எல்லாம் மறந்துட்டோம்.

இப்ப நம்ம தேசபக்தி கிரிக்கெட் மூலமாத்தான் வெளிப்படுது, அதிலும் பாகிஸ்தான் உடனான மேட்ச்ன்னா அதீதமா வெளிப்படுது.

ரஜினி பத்தி பாடப்புத்தகத்துல வருது. குடியரசு, சுதந்திர தின நாட்களில் நடிகையர் பேட்டி வருது.

We have become a country where war heroes and intellectuals are ill treated. Matinee idols have become our mentors.

Sundar Padmanaban said...

வடகரைவேலன்

கருத்துகளுக்கு நன்றி.

//ரஜினி பத்தி பாடப்புத்தகத்துல வருது. குடியரசு, சுதந்திர தின நாட்களில் நடிகையர் பேட்டி வருது.

We have become a country where war heroes and intellectuals are ill treated. Matinee idols have become our mentors.//

Celebrities புகழோடு இருப்பது உலகெங்கும் நடப்பதுதான். இங்கு மட்டும் என்ன வாழ்கிறது? ஆரம்பப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளி வரை சிறுபிள்ளைகளிலிருந்து பெரிய பிள்ளைகள் வரை அவர்களுக்கு ரோல் மாடலாக இருப்பது ஆப்ரஹாம் லிங்கனோ, ஜார்ஜ் வாஷிங்டனோ அல்ல - High School Musical, Hannah Montana போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் வரும் இளைய கலைஞர்கள்தான். அவர்கள் படம் அச்சிடப்பட்டிருந்தால் குப்பையைக் கூட நிறைய பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆக ஊடகங்களில் வரும் கலைஞர்களின் மீதான பிரேமை பொதுவான ஒன்றுதான். ஆனால் இம்மாதிரி தேசத்திற்குத் தொண்டாற்றியவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற கேவலங்கள் நம் நாட்டில் அதிகமாகவே இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

எது முக்கியம் என்று பயிற்றுவிப்பதில் அடிப்படையே கோளாறாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நம்மால் முடிந்தது நம் பிள்ளைகளுக்கு சாம் பஹதூர் மாதிரியானவர்களைப் பற்றிச் சொல்லிக்கொடுத்து தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவையைப் பற்றி அறியச் செய்வதுதான். :(

நன்றி.

கானகம் said...

இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று இந்த நன்றி மறப்பது.

//அவமானமாக உணர்கிறேன்! :(//

நானும் மிக மோசமாய்.. உலகமே இந்தியர்களை கேவலமாய் பார்ப்பதாய்.

நன்றி

Sundar Padmanaban said...

கானகம்

//இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று இந்த நன்றி மறப்பது. //

நன்றி மறப்பது எல்லா தேசங்களிலும் நடக்கக்கூடியதுதான்.

மானக்ஷா போன்றவர்களைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்காத கல்வி அல்லது ஊடக அமைப்புக் கோளாறுகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நமக்குச் சுதந்திரப் போராட்டத்தை விட்டால் வரலாறே கிடையாது போன்று ஒரு பிரமையிருக்கிறது என்று நினைக்கிறேன். தேசத்தலைவர்கள் என்றாலே காந்தி, நேரு, சுபாஷ், படேல் என்றும் போராட்டக்காரர்கள் என்றாலே கட்டபொம்மன், பகத்சிங் என்றும் ஒரு கொலு வரிசையை வைத்திருக்கிறோம். 1947க்கு இங்கிட்டு வருவதேயில்லை. அதான் பிரச்சினை!

ஒரு வேளை கமலோ ரஜினியோ ஊடகங்களில் தோன்றி மானக்ஷாவுக்கு அஞ்சலி தெரிவித்திருந்தால், அல்லது முரசொலியில் உடன்பிறப்புக் கவிதை அல்லது நமது எம்ஜியாரில் ஜெ. அஞ்சலி அறிக்கை என்று எதாவது வந்திருந்தால் ரசிகப் பெருமக்களுக்கும், கழகக் கண்மணிகளுக்கும், மறத்தமிழர்களுக்கும் தெரிந்திருக்கும்!

எல்லைச் சூடு அடிப்பதாலோ என்னவோ வடக்கில் நிறைய இந்தியா பாகிஸ்தான் நாடுகளை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இங்கு பழனி, மதுரை, கோயமுத்தூர் மாப்பிள்ளே, திருநெல்வேலி, சென்னை-28, திருப்பதி என்று தமிழ் மாநிலத்தையே தமிழ்'நாடாக'ப் பாவித்து அதன் எல்லையை விட்டு வெளியே வருவதேயில்லை.

ஆக மொத்தமான இருட்டடிப்பு மானக்ஷா போன்றவர்களுக்கு!

நல்லா இருங்கடே!