Tuesday, July 15, 2008

'ஙே'யென்று விழித்தேன்! இருந்தாலும்....



இது வரை இந்தியன் ரயில்வே இணையத்தை உபயோகித்ததில்லை. இன்று முயன்ற போது சற்று தடுமாறிப் போனேன்!

குறைகள் இருந்தாலும் இந்த அளவுக்காவது சேவையை மேம்படுத்தியிருக்கும் இந்தியன் ரயில்வேக்கு வாழ்த்துகள். (http://irctc.co.in)

17 comments:

பிரேம்ஜி said...

ஓஹோ..மத்த நேரத்தில சர்வரை ஆஃப் பண்ணிட்டு தூங்கிடுவாங்களா?

Sundar Padmanaban said...

பிரேம்ஜி

ரூமைப் பூட்டிக்கிட்டு தனியா ஒக்காந்து ஏன் இப்படி ஒரு செய்தியை Online Reservation System-ல போட்ருக்காய்ங்கன்னு இன்னும் யோசிச்சிக்கிட்டேதான் இருக்கேன். ஒண்ணும் பிடி படலை! :-(((

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பர்.
//ரூமைப் பூட்டிக்கிட்டு தனியா ஒக்காந்து ஏன் இப்படி ஒரு செய்தியை Online Reservation System-ல போட்ருக்காய்ங்கன்னு இன்னும் யோசிச்சிக்கிட்டேதான் இருக்கேன். ஒண்ணும் பிடி படலை//
இது சூப்பரோ சூப்பர்

Sundar Padmanaban said...

rapp,

வருகைக்கு நன்றி.

இது ரயில்வே ரிசர்வேஷன் பண்றதுக்காக எல்லா விவரத்தையும் கொடுத்ததுக்கப்புறம் வர்ற மெசேஜ்! ரயில்தான் டொண்டிபோர் அவர் ஓடுதே. ரிசர்வேஷன் கவுண்ட்டர்லதான் ஆள் அஞ்சரைக்கு மேல இருக்கமாட்டாங்கன்னு நெனச்சேன். ஆன்லைன் சிஸ்டத்துக்கும் ஆபீஸ் அவர்ஸ் இருக்கு போலருக்கே!

இந்த மெசேஜைப் பாத்ததும் கோவமோ, சிரிப்போ வராம ஒரு மாதிரி மண்ணு மாதிரி ஃபீல் பண்ணேன்! :-)

கயல்விழி said...

:)

இது கிராபிக்ஸ் இல்லையே?

Sundar Padmanaban said...

கயல்விழி (நல்ல தமிழ்ப் பெயர் - பாராட்டு)

மெட்ராஸ் டு ட்ரிச்சி என்னென்ன வண்டில்லாம் ஓடுதுன்னு பாக்கலாம்னு ஒரு மணி நேரமா இணையத்துல தேடி மண்டை காய்ஞ்சு கடைசில இதுக்குப் போய் பார்த்தா இப்படி ஒரு மெசேஜு.

//இது கிராபிக்ஸ் இல்லையே?//

இது ஒண்ணுதான் பாக்கி! நீங்க வேணா இப்ப ட்ரை பண்ணி பாருங்களேன்! http://irctc.co.in :-))

துளசி கோபால் said...

அட! ரயில்வே ரிஸர்வேஷனா?

சரியான நேரம்(!!)தான் போல எனக்கு:-)))

இப்பத்தான் ரயில்வே சம்பந்தமான ஒரு சுவையான (வெளி வரப்போகும் புத்தகத்தை) 'முழி' பெயர்க்க ஆரம்பிச்சுருக்கேன்!!!

Sundar Padmanaban said...

துளசிக்கா

நலமா? ரொம்ப நாளாச்சு! :-)

//இப்பத்தான் ரயில்வே சம்பந்தமான ஒரு சுவையான (வெளி வரப்போகும் புத்தகத்தை) 'முழி' பெயர்க்க ஆரம்பிச்சுருக்கேன்!!!//

அப்படிப் போடுங்க அருவாளை! நீங்க இந்த வாக்கியத்தை எழுதின விதத்துலயே தெரியுதே! வழக்கமா ஏற்கனவே வந்த புத்தகத்தை மொழிபெயர்ப்பாங்க! எனக்குத் தெரிஞ்சு இனிமேதான் வெளிவரப் போற புத்தகத்தை மொழிபெயர்க்கிற மொத ஆள் நீங்கதான்! :-))

அது சரி! எதுலருந்து எதுக்கு பெயர்க்கிறீங்க!

SurveySan said...

not bad actually.

probably maintenance time. I am guessing, not many are awake around this time, unless you are somewhere else trying to book a ticket for people back home :)

i dont know if they came out of the COBOL systems yet.
most of the financial systems and stock brokering systems (which uses MF and COBOL) does this type of maintenance in the US as well. :)

துளசி கோபால் said...

நலம்தான் சுந்தர்.

இங்கிலிபீஸுலே இருந்து (என்)தமிழுக்கு.
:-)))))

Sundar Padmanaban said...

சர்வேசன்

தெள்ளத் தெளிவா அதான் ஒர்க்கிங் அவர்ஸ்னு போட்ருக்காங்க! :-) பராமரிப்பா இருக்காது.

//you are somewhere else trying to book a ticket for people back home//

நான் இங்கதான் பாஸ்டன்ல. நானேதான் ரெண்டு வாரத்துல ஊருக்குப் போறதா இருக்கேன். பிரிட்டிஷ் ஏர்வேஸ் போய் சேர்றது காலைல மூணரை மணிக்கு. அப்படியே ஆறரைக்கு ஒரு வண்டி இருந்தா புடிச்சு ஸ்ரீரங்கம் போயிரலாம்னு பாத்தேன். அதுக்குத்தான் இந்த மண்டகப்படி கெடச்சுது! :-) வீட்டுக்காரம்மாவும் புள்ளைங்களும் போன வாரமே போயேச்சு - அவங்களுக்கு ஒரு படையே சென்னை விமானநிலையத்துக்கு வந்து கார்ல அழைச்சுட்டுப் போய்ட்டாங்க. 'நீ ஒண்டி ஆளுதான - ஒனக்கு மட்டும் எதுக்கு தனியா காரு தண்டம். டிரெயினைப் பிடிச்சு வந்துக்கோ'ன்னு சொல்லிட்டாங்க! சென்னை டு ட்ரிச்சி விமானமும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் போல - நான் போய் சேர்ற தேதிக்கு பிளைட்டு கிடையாது! :(

நாளைக்கு சென்னை நண்பனுக்கு ஒரு போனைப் போட்டு டிக்கெட் வாங்கச் சொல்லவேண்டியதுதான்!

சீமாச்சு.. said...

என்ன சுந்தர் இதுக்குப் போயி இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க..

அவங்களுக்கு End of Day processing கலெக்ஷன் என்றது கல்லா கட்டறது.. சர்வர் backup, maintenence services எல்லாத்துக்கும் டயம் வேண்டாமா? அங்க இருக்கிற அட்மினிஸ்ட்ரேட்டரைக் கேட்டுப் பாருங்க இதுக்கே என்ன முழி பிதுங்குறார்னு...

இத்தனைக்கும் அவர் Government சம்பளம் வாங்குற IAS லெவல் ஆபீஸரா இருப்பாரு.. அவருக்குத் தெரியும் திறமையான ஆளுங்க கெடைக்கிறது எவ்வளவு கஷடமின்னு....

இந்த அளவு ரெயில்வே முன்னேறியிருக்கறதே எனக்கு சந்தோஷம் தான்.. நம்ம நாட்டுல பிரச்சினை எப்போதும் Quality of Service தான் அதுவும் இருக்குற Volume of transactions பார்த்தா... இந்த சர்வீஸே பெட்டர்..

2 டாலர்ல.. மயிலாடுதுறையிலிருந்து மெட்ராஸுக்கு ட்ரெயின் உடறான்.. 6 மணி நேரம் பயணம்.. இதே நியூ ஜெர்ஸியிலிருந்து நியூ யார்க் 40 நிமிஷம் போகறதுக்கு 8 டாலர் சார்ஜ் பண்றான்..

என்னோட வோட்டு இந்தியன் ரெயில்வேக்குத் தாம்பா.. ஒரு விதத்துல் நான் இந்தியன் ரெயில்வேலயும் (6 மாசம்) வேலை பார்த்திருக்கேன்.. NJ Transit லயும் வேலை பார்த்திருக்கேன்...

எனக்காக முதல்ல இந்த பதிவு தலைப்ப்பை மாத்திட்டு இந்த மாதிரி 19 X 7 சர்வீஸ் தருவதற்கு அவங்களை வாழ்த்துங்க..

அன்புடன்
சீமாச்சு..

Sundar Padmanaban said...

துளசிக்கா

//இங்கிலிபீஸுலே இருந்து (என்)தமிழுக்கு.//

கலக்குங்க! வாழ்த்துகள்.

தசாவதாரம் படம் வர்ற வரைக்கும் பரம ரகசியமா கதையை வெளியிடாம இருந்த மாதிரி - நீங்களும் என்னிக்கு ரிலீஸோ அன்னிக்கு கொஞ்சம் புத்தகத்தைப் பத்தி சொல்லுவீங்கன்னு நம்பறேன்!

வயசாயிட்டதால முந்தி மாதிரி மரத்தடி பக்கமோ வலைப்பக்கமோ அடிக்கடி வர முடியறதுல்ல! :-)))

Sundar Padmanaban said...

சீமாச்சு ஸார்

கொறை சொல்லலை. இது வரைக்கும் ஆன்லைன்ல இந்தியன் ரயில்வே ஸைட்டை உபயோகிச்சதுல்ல. இன்னிக்குத்தான் பாக்கறேன். IT-ல எங்கிட்டோ போயிட்டதா பரவலா பேசிக்கறாங்களே-ன்னு பாத்தேன். எல்லா தகவல்களையும் வாங்கிட்டு கடைசில இந்த மெஸேஜ் வந்ததும் விழிக்க வேண்டியதா போச்சு!

Surveysan may be right - the system is not available only for 5:30 hours between 11:30pm and 5am - quite possible that it's undergoing maintenance during the night hours.

No offense meant to our magnanimous Indian Railway! I swear! :-)

நீங்க சொன்ன மாதிரி ஒரு வரியையும் போட்டாச்சு!

நன்றி.

ramachandranusha(உஷா) said...

சுந்தர், இப்பொழுது எல்லாம் விமான டிக்கெட் என்றால் மேக் மை டிரிப். ரயில் டிக்கெட் irctc.co.in தான். மிக மிக மிக செளகரியமாகவும், விரைவாகவும் இணையம் மூலம் வீட்டில் இருந்தப்படி அதிகபட்சம் பத்தே நிமிடத்தில் வேலை ஆகிவிடுகிறது.
மற்றவர்களுக்கு புக் செய்து, மெயில் செய்துவிட்டால், காப்பி எடுத்துக் கொண்டு விடுவார்கள். எல்லா இடங்களுக்கும் இப்படிதான்
வீட்டில் இருந்தே செய்துவிட்டு புறப்படுகிறோம்.
திருச்சிக்கு தினமும் பல விமான, தனியார் விமான சேவைகள் இருக்கின்றன.உங்களுக்காக makemytrip.com
போய் பார்த்தேன். தினமும் பல விமானங்கள் ஓடுகின்றன. கட்டணம் குறைந்த பட்சம், 3500 ரூபாய் வாக்கில். போய் பார்த்துட்டு சொல்லுங்க.

Sundar Padmanaban said...

உஷா

நலமா? :-)

indian airlines, jet airways ரெண்டையும் செக் பண்ணேன். அன்னிக்குத் தேதிக்கு திருச்சிக்கு வண்டி இல்லைன்னுட்டாங்க. makemytrip பாக்கறேன். ரொம்ப நன்றி.

Anonymous said...

vera onum illa ,ticket kidaikathavanga nightla poonthu motha ticketyum book paniranga , athan intha timing, vera onum illa ..

vivek.j