ஆறுவது சினம் - ஆனால் இதற்கெல்லாம் ஆறினால் சொரணையற்ற தமிழர்களாகவே இருப்போம்.
சேலம் நெத்திமேடு ஸ்ரீரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த ரோட்டுப்பாடம் இது. தினமலரில் இதைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
இந்த வேலைக்குக் குழந்தைகளை உட்படுத்தியவர்களை என்ன செய்யலாம்? அங்கிருக்கும் வலையுலக நண்பர்கள் அதிகார வர்க்கத்திடம் கடுமையான கண்டனங்களையும் புகார்களையும் அளித்து இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆத்திரத்தில் ஏதாவது கெட்டவார்த்தையை பயன்படுத்திவிடுவேன் என்று அஞ்சுவதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
***
4 comments:
என்ன கொடுமை இது! ஆமாம், இது child labour தானே? அதுவும் ஓசியில், அவர்களுடைய safety-க்கு அக்கறையில்லாமல்!
என்ன கொடுமை இது!. காலில் அணியக்கூட எதுவும் இல்லாத பிஞ்சுக் கால்கள். எத்தனை கும்பகோணம் வந்தாலும் நமது ஆசிரியர்கள் திருந்தமாட்டார்களா?
PULLIRAJA
சேதுக்கரசி
என்ன சொல்றதுன்னு தெரிலைங்க. பார்த்தாலே ரத்தம் கொதிக்குது. இதையும் பாத்துக்கிட்டு சும்மா போறவங்களை என்ன செய்யறது? இந்த அளவுக்கா சொரணையற்றவர்களாகி விட்டோம்? இதுக்கா குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம் பெற்றோர்களாகிய நாம்?
சே.
//எத்தனை கும்பகோணம் வந்தாலும் நமது ஆசிரியர்கள் திருந்தமாட்டார்களா?
//
ஆங்கில மெட்ரிக்குலேஷன் பள்ளி என்றதும் பெற்ற பிள்ளைகளை ஆங்கிலேயர்களாக்கிவிடும் உத்தேசத்துடன் வாயைத் திறந்துகொண்டு வந்து பள்ளிகளை ஈசல் போல மொய்த்து தலையை அடமானம் வைத்தாவது பணம்கட்டிப் படிக்கச் சேர்க்கும் ஆங்கில மோகத் தமிழ்ப் பெற்றோர்களுக்கு இப்படங்கள் சரியான செருப்படிகள்!
அரசு இயந்திரம் தூங்குவது போல நடிக்கவில்லை. துருப்பிடித்து நிற்கிறது. கடந்து போகும் பொதுஜனங்கள்கூட சொரணையற்ற தமிழர்கள் அல்லவா?
குறைந்த பட்சம் இந்தப் படங்களை எடுத்த போட்டோகிராபராவது பள்ளிக்குச் சென்று ஆட்சேபணை எழுப்பினாரா என்று தெரியவில்லை.
தினமலர் செய்திகளை வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தால் நன்று.
Post a Comment