Friday, March 16, 2007

அடப் பாவிகளா!

மனிதனின் சாதனைப் படிக்கட்டுகளில் மற்றுமொன்று என்றாலும் ஏனோ பெருமைப்பட முடியவில்லை - அந்தப் புறாவின் கண்கள்!

Image and video hosting by TinyPic

நன்றி: தினமலர்.

4 comments:

Venkat said...

சுந்தர் - இதெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணம்.

கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக எலிகளின் தலையில் பொருத்துவதற்காக ஒரு காமெராவை எங்கள் குழுவில் வடிவமைத்தோம். இத்துடன் கூடவே எலியின் மூளையில் தகடுகளை (electrode) நேரடியாகப் பதித்து அதன் பார்வை நரம்புகள் மூளையுடன் தொடர்புகொள்வதை அறிய முடியும்.

இது தொடர்ச்சியாகப் பிரகாசமான ஒளியில் இரவு-பகல் குழப்பங்கள் எப்படி ஏற்படுகின்றன என்று ஆராயப் பயன்படுகிறது. எங்கள் வடிவமைப்பு காமெராவில் ஒரு வயர்லெஸ் தகவல் பரப்பியும் உண்டு. :)

Unknown said...

தெருநாய்களை கொல்வதை பற்றிய பதிவை வேதனையுடன் படித்து விட்டு வந்தால் இப்போது இந்த பதிவு:((((

இருக்கும் உயிரினங்களில் மிக கேவலமான இனம் மனிதன் தான் சுந்தர்.அடுத்த உயிரினத்தை குப்பைக்கு சமமாக மதிக்கும் மனப்போக்கு கொண்டவன்.வலி, வதை,கண்ணீர், உனர்ச்சிகள் இவை அனைத்து உயிரினத்துக்கும் பொது என்பதை அறியாதவன்...

நமக்கும் இம்மாதிரி உயிரினத்துக்கும் வித்யாசம் 0.01% செல்கள் தானாம்.

Sundar Padmanaban said...

செல்வன்

//அடுத்த உயிரினத்தை குப்பைக்கு சமமாக மதிக்கும் மனப்போக்கு கொண்டவன்.வலி, வதை,கண்ணீர், உனர்ச்சிகள் இவை அனைத்து உயிரினத்துக்கும் பொது என்பதை அறியாதவன்...//

இதைச் சொன்னா ஊர்ல நம்மள பைத்தியம்ங்கறாங்க செல்வன்.

அதுக்காக வாய மூடிக்கிட்டு இருக்க முடியலை. சொல்றதைச் சொல்லிட்டு நம் அளவுல செயல்படுத்திக்கிட்டு இருக்கறதுதான் ஒரே வழி்.

மனிதனின் அதீத சுயநலத்தின் விளைவுகளை வருங்கால சந்ததிகள் அனுபவிக்கப் போகின்றன. மிருகங்களுக்கென்ன - அவை சிவனே என்று இருக்குமிடத்தில் இருந்துகொண்டு எல்லாம் செளக்கியமாக இருக்கத்தான் போகின்றன. முற்பகலில் மனிதன் செய்பவற்றுக்குப் பிற்பகலில் அவனே விளைவுகளை அனுபவிப்பான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

Sundar Padmanaban said...

வெங்கட்

கேக்கறதுக்கு என்னமோ நல்லாதான் இருக்கு. இதையே மனிதர்களின் மீது இன்னொரு வலிமையான உயிரினங்கள் தோன்றிப் பிரயோகித்தால் நம் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை!

சோதனை செய்பவர் ஏன் ஒத்துழைக்க விரும்பும் சக மனிதனிடமோ தனக்குத் தானேவோ சோதித்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்? உயிர் போய்விடும் என்ற பயம. அந்தச் சித்திரவதையை யார் அனுபவிப்பது என்ற பயம்.

அவை எதிர்க்க மாட்டா என்ற ஒரே காரணத்திற்காக எளிய உயிரினங்களை வதைப்பது எந்தக் காரணத்தை முன்னிட்டாலும் என் மனது ஏற்க மறுக்கும் விஷயம்.

அந்தத் தகடுகள் இரவு பகல் குழப்பங்களோடு அவை அனுபவிக்கும் மரண வேதனையையும் வயர்லெஸ் தகவலாக உங்களுக்கு அனுப்புமா?

நன்றி.