அன்புள்ள திரு. சு.ரா.
நேற்றுதான் உங்களைச் சந்தித்தது போல இருக்கிறது. ஒரு மாதம் கூட ஆகவில்லை உங்களைச் சந்தித்து. நன்றாக சுறுசுறுப்பாகத்தானே இருந்தீர்கள். உங்களுடைய கரங்களின் மென்மை இன்னும் என் உள்ளங்கையில் பொதிந்திருக்கிறது.
அதற்குள் கடவுள் உங்களை அழைத்துக் கொண்டாரா?.
ஐயா.. உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகளில்லை.
//ஆனால் ஒன்று நிச்சயம். இப்போதும் நான்தான் அழிந்து இருக்கிறேனே தவிர, என் கனவுகள் அழியவில்லை. அவை ஒரு நாளும் அழியா. மற்றொரு ஜீவன், இதே கனவுகளைச் சூலுற்று, பேணி வளர்த்து, அவற்றை இந்த மண்ணில் அர்ப்பணித்து அவற்றைச் செழுமைப்படுத்தித் தன்னையும் விகசித்துக் கொள்ளும். என்னிலிருந்து மற்றொருவனிடம் தொற்றும் கனவை எந்த ஆயுததாரிகளாலும் அழிக்க முடியாது. நான்தான் ராஜா என்ற எண்ணத்தில் இவர்கள் என்னை அழித்தால் நான் அழிந்து போவேன். ஆனால் நான்தான் என் கனவு என்று நினைத்து என்னை அழிக்க முற்பட்டால் ஏமாந்து போவார்கள். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஒரு மாட்டைக் கொல்வதற்கும் ஒரு மனிதனைக் கொல்வதற்கும் வித்தியாசம் இதுதான்.
- ஜே.ஜே. சில குறிப்புகளில் நீங்கள் சொன்னது//
என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஐயா... உங்கள் கனவுகளை நாங்கள் சூலுற்று, பேணி வளர்த்து இந்த மண்ணுக்கும் மொழிக்கும் அர்ப்பணம் செய்கிறோம்.
அஞ்சலிகளுடன்
சுந்தரராஜன்.
2 comments:
இனிய சுந்தர்,
சமீபத்தில் சந்தித்து வியந்த மனிதரொருவரின் மறைவு உங்களுக்கு எத்தனை அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் சு.ரா சந்திப்பு பற்றிய பதிவில் தெரிந்த உணர்வோட்டத்தை படித்த்வன் என்ற முறையில் சொல்கிறேன் - சு.ரா தனக்குப் பின் பேர் சொல்ல காலச்சுவடு கண்ணனை மட்டும் விட்டு செல்லவில்லை.
என்றென்றும் அன்புடன்
சுந்தர்ராஜன் பசுபதி
I love your doggie clock!! :-)
Post a Comment