Wednesday, November 02, 2005

உடனடி நீதி

ஷார்ஜாவில் வசிக்கும் பீனா சோனி என்ற பெண்மணி அவரது உறவினர் பெண்மணி ஒருவரோடு டாக்ஸியில் சென்றுகொண்டிருந்தபோது சரியாக ஓட்டாமல் திடீர் பிரேக்குகள் போட்டு ஓட்டுனர் இப்பெண்களை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தாராம். சற்று கவனமாக ஓட்டக் கோரியபோது ஓட்டுனரிடமிருந்து பறந்து வந்தன ஆபாசம் கலந்த வசைச் சொற்கள்.

வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு பீனா காவல்துறையினருக்குத் தொலைபேச, உடனடியாக அங்கு வந்து விசாரித்தவர்கள் ஓட்டுனரின் மறுப்பு வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

பீனாவிடம் "நீங்கள் ஒரு புகார் எழுதிக் கொடுங்கள். இந்தாளை உள்ளே தள்ளி விடுகிறோம்" என்று சொல்ல அவர் "உள்ளே தள்ளினால் இவரது தொழில் கெட்டுப்போகும். அதை நான் விரும்பவில்லை; ஆனால் இவரை உடனடியாகத் தண்டித்தால்தான் என் மனது ஆறும்" என்று பதில் சொல்லியிருக்கிறார்.

"அப்படியானால் 'உடனடி நீதி' என்ற கொள்கையின் படி நீங்கள் இவரை இங்கேயே அடிக்கலாம்" என, பீனா சகோதரரிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்க, அவரும் உடனடி நீதி வழங்க அறிவுரை சொன்னார்.

சுற்றிய கூட்டனைக் காவல் துறையினர் விலகச் சொல்லி விரட்ட, பீனா கோபம் தீர டாக்ஸி ஓட்டுனரின் கன்னத்தில் அறைந்தார். தண்டிக்கப்பட்ட ஓட்டுனர் அனுப்பப் பட்டார்.

"இப்பொழுதுதான் மனதுக்கு நிம்மதியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. அந்த ஆள் இனிமேல் யாரிடமும் அசிங்கமாகப் பேசமாட்டார்".

செய்தி: கலீஜ் டைம்ஸ்.

***

"உடனடி நீதி" இந்தியாவில் அமல்படுத்தப் பட்டால்?

- பேருந்துகளில் பெண்களின் பின்புறத்தில் உரசுபவர்களின் பின்புறத்தை உப்புத்தாள் காகிதம் கொண்டு தோல் உரியும் வரைத் தேய்க்க வேண்டும்.

- கழிப்பிடம் இருந்தும் அதன் சுற்றுச் சுவர்களிலும் சந்துகளிலும் ஒன்றுக்கிருப்பவர்களின் *** நுனியில் ட்வைன் நூலால் கல்லு முடிச்சு ஒன்றைப் போட்டுவிட வேண்டும் - 2 நாள்களுக்கு.

- வன்புணர்ச்சி செய்தவர்களை சில கிராமங்களில் பன்றிகளுக்குச் செய்வது போல் ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்.

மற்ற யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

6 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இந்த மாதிரி மெலோடிரமாடிக் வழியெல்லாம் சரிவருமான்னு தெரியலை.

ஆனா, பஸ்ஸில சீண்டுறவங்கள்ல பெரும்பாலானவர்களுக்கு தண்டனை உடனே கொடுத்திர்ரோம்ல.

=======

சுந்தர், உங்க மின்னஞ்சல்பெட்டியைக் கொஞ்சம் பாருங்க. இல்லைன்னா
mathygrps at gmail dot com

முகவரிக்கு ஒரு வரி எழுதுங்க.

-மதி

~Nandalala~ said...

இச்சம்பவத்தில் 'நீதி' என்ற ஒன்றிருப்பதாகவே தெரியவில்லை - அப்பெண்கள் தன் எதிர்ப்பை காட்டியது தவிர.

/*- பேருந்துகளில் பெண்களின் பின்புறத்தில் உரசுபவர்களின் பின்புறத்தை உப்புத்தாள் காகிதம் கொண்டு தோல் உரியும் வரைத் தேய்க்க வேண்டும்.

- கழிப்பிடம் இருந்தும் அதன் சுற்றுச் சுவர்களிலும் சந்துகளிலும் ஒன்றுக்கிருப்பவர்களின் *** நுனியில் ட்வைன் நூலால் கல்லு முடிச்சு ஒன்றைப் போட்டுவிட வேண்டும் - 2 நாள்களுக்கு.

- வன்புணர்ச்சி செய்தவர்களை சில கிராமங்களில் பன்றிகளுக்குச் செய்வது போல் ஆண்மை நீக்கம் செய்யவேண்டும். */

இது வெறும் வக்கிர வெளிப்பாடாக மட்டுமே உள்ளது.
-நந்தலாலா.

Anonymous said...

தண்டனையின் நோக்கம் என்னவென்று குழப்பம் வருகின்றது...

பிரச்சனையின் வேர் களைதளின்றி, நுனி வெட்டப்புறப்படுவதே இது...

பேருந்தில் அக்கிரமம் செய்பவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தினை முன் வைத்து அந்த தண்டனையை குடுத்தால் வேண்டுமானால் அவர்கள் திருந்த எத்தனிக்கலாம்....

-
செந்தில்/Senthil

Sundar Padmanaban said...

பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.

சதயம்:

குற்றவாளிகளுக்கு மன ரீதியான தண்டனை என்று ஒன்று கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் - என்ன தான் தீர்வு?

நான் கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்ற வன்முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் நம்மூரில் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து கிடப்பில் போடப்படும் வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னதான் பலன்? என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை.

நந்தலாலா:

//இது வெறும் வக்கிர வெளிப்பாடாக மட்டுமே உள்ளது//

ஒப்புக் குள்கிறேன். ஆத்திரத்தின் வெளிப்பாடாக நான் அதை எழுதினேன்.

ஆனால் பாதிப்பே குற்றவாளிகளின் வக்கிரங்களின் வெளிப்பாடுதானே? அதற்கு என்ன தீர்வு? எந்த மாதிரியான தண்டனைகள் அவர்களது வக்கிரத்தனத்தைப் போக்கிக் குற்றங்களைக் களையச் செய்யும்? உங்களது கருத்துகளைச் சொல்லுங்களேன்.

வக்கிரக்காரர்களுக்கு என்ன தண்டனை?

யாத்ரீகன்:

ஒருவன் வக்கிரம் பிடித்தவனாக இருப்பது அவனது குழந்தை பிராயத்தின் வளர்ப்பு முறையினாலும் தற்போதைய வாழ்க்கை முறையினாலும் இருக்கலாம்.

//பேருந்தில் அக்கிரமம் செய்பவர்களுக்கு, அவர்கள் குடும்பத்தினை முன் வைத்து அந்த தண்டனையை குடுத்தால் வேண்டுமானால் அவர்கள் திருந்த எத்தனிக்கலாம்....
//

நல்ல யோசனை. ஆனால்நடைமுறையில் இது நடக்கிற காரியமா சொல்லுங்கள்?

எந்த வித தண்டனையும் தீர்ப்பும் இழப்பை ஈடு செய்யப் போவதில்லை. ஆனால் குற்றங்களை மேலும் பரவாமல் தடுக்க வளைகுடா நாடுகளில் இருப்பதைப் போல கடுமையான தண்டனைகள் கொண்டுவந்தால் முடியும் என்று நான் நினைக்கிறேன்.

குற்றத்தின் ஆணிவேர்கள் நன்றாக அழுந்தி ஊன்றியிருக்கின்றன. உதாரணமாக சாலை விதிகளின் மீறல்களை எடுத்துக் கொள்வோம். ஒழுங்காக ஓட்டும் பயிற்சி பெற்று, முறைப்படி தேர்வில் கலந்து கொண்டு முறைப்படி உரிமம் வழங்கப்பட்டிருந்தால் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் இருந்து கொண்டே இருக்கும். மீறல்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டாயம் குறையும். துபாயில் ஓட்டுநர் உரிமம் எடுக்க வருடக்கணக்கில் கூட சில சமயம் ஆகும். அப்படிப் பாடுபட்டு எடுத்த உரிமத்தை இழப்பதில் எந்த ஓட்டுனருக்கும் மனது வராது. விதிகள் ஒழுங்காகக் கூடிய மட்டிலும் கடைப் பிடிப்பார்கள்.

தண்டனையின் கடுமை குற்றங்களைக் குறைக்கும். சட்டங்களை - பெயரளவில் வைத்திராமல் - அமல்படுத்துவதிலும் இன்னும் கடுமை காட்டினால் குற்றங்கள் இன்னும் குறையும் என்பதே என் நம்பிக்கை.

Sundar Padmanaban said...

நண்பரே,

//குற்றம் நிரூபிக்கப் பட்டவன் தன் மாத வருமானத்தில் அல்லது மாதம் ஒரு கனிசமான தொகையை பாதிக்கப்பட்டவனுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு செலுத்த வேண்டுமென்று ஒரு தீர்ப்பு தரப்பட்டால் ஒவ்வொரு மாதமும் அவன் உழைப்பு சுரண்டப்படுவது ஒரு வகையான உளவியல் தண்டனையே.....
//

இது இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஜீவனாம்ஸம் கொடுக்கவேண்டும் என்ற தீர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. "ஜீவனாம்ஸத் தொகை வரவில்லை" என்று புகார்களும் வருகின்றன.

இதில் இரண்டுவகையான பிரச்சினைகளை நான் காண்கிறேன்.

1. பொருளாதார ரீதியாக அடித்தட்டில் இருக்கும் குற்றவாளிகள் - ரவுடி ஒரு பெண்ணைக் வன்புணர்ச்சி செய்தான் என்றால் அவனிடம் மாதாமாதம் பணம் கொடுக்கவேண்டும் என்பது போன்ற தீர்ப்பு பயன் தராது. பணத்துக்குக் திருடுபவர்களும் இதே வகையே. இவர்களால் பணம் கொடுக்க முடியாது என்பதோடு, இதை ஒரு தண்டனையாக அவர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குடும்பம், அன்பு, பாசம் போன்ற எந்த சூழ்நிலையுமின்றிக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உளவியல் ரீதியாகத் தரப்படும் தண்டனைகள் பலனளிக்குமா என்று தெரியவில்லை.

2. வசதிபடைத்த குற்றவாளிகள். மேலே சொன்ன குற்றத்தை ஒரு வசதி படைத்தவன் செய்தான் என்றால் அவனுக்கு மாதாமாதம் பணம் கட்டுவது பிச்சை போடுவது மாதிரி. இன்னும் பல குற்றங்களை தைரியமாகச் செய்வான்.

Interrogation என்பதில் உளவியல் ரீதியாகத் துன்புறுத்துதலும், அதற்குப் பணியாதவர்களை உடல்ரீதியாகத் துன்புறுத்துவதும் உள்ளடங்கும்.

"எப்பேர்ப்பட்ட தாதாவாக இருந்தாலும் படை பலம் இருக்கும்போதுதான் அவனது தைரியமும் திமிரும். அவனைத் தனியனாக்கிவிட்டால் பெரும்பாலானோர் கோழைகளாகவே இருக்கிறார்கள். காவல்நிலையத்திற்குள் அழைத்து வரும்போதே ஐயாஆஆ என்று காலில் விழுந்து விடுவார்கள்" என்று ஒரு காவல்துறை அதிகாரி சொன்னதாகப் படித்திருக்கிறேன்.

கன்றினைக் கொன்றதற்காக மகனைத் தேர்க்காலில் இட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். தவறு செய்த மகன் தண்டிக்கப் பட்டதோடு (உடல் ரீதியாக), அம்மகனைப் பெற்றதற்காக அவனை இழந்து தந்தையும் புத்திர சோகத்திற்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான் (உளவியல் ரீதியாக).

என்னவோ போங்க ஸார். கொஞ்சம் 'பெரிய விஷயத்தை'த் தொட்டு விட்டேனோ என்று இப்பதிவு எழுதியதும் தோன்றுகிறது.

Anonymous said...

This is a very simplistic view.
Its also worthy to think about why a person becomes a rowdy and commits a crime and why someone has not.

putting it in another way a crime commited by a disadvantaged person should be lesser than the crime commited by a person who has no reason to commit the crime.

can we equate a rowdy harassing a lady with a respectable person (K.P.S Gill ) doing that ??

Biggest flaw with anniyan was this.
Sometimes what is crime and whats not itself is subjective of the society views and inturn the people who are powerful in that society (Dubai !!).

In such a case punishment itself becomes organised state approved crime.

This is just small part of a big issue .