Wednesday, October 12, 2005

பிணக்குவியல் மீது நிற்கும் பிடிவாதச் சாத்தான்கள்

இந்தப் பக்கத்தில் இந்திய மீட்புக் குழுவினர் கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதிகள் அனைத்தையும் அடைந்து வேகமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாக் ஆக்கிரமிப்புப் பகுதியில்?

நடுக்கியெடுக்கும் குளிர். காத்துக்கொள்ள போர்வைகள் கிடையாது. இருக்க இருந்த இடங்கள் அழிந்தன. உணவில்லை. குடிக்கத் தண்ணீரில்லை. பிணங்கள் இடர்பாடுகளின் அடியில். காயங்களுக்கு மருந்துகளில்லை. உதவி இன்னும் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
image source : www.bbcnews.co.uk
என்னதான் அரசியல் நிலைப்பாடுகள், பழம்பகை என்று இருந்தாலும் இந்த மாதிரி பேரழிவு சமயத்தில் கூட அரசியலை முன் வைத்து "மீட்புப் பணியில் இணைந்து செயல்படலாம்" என்று ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவின் உதவியை நிராகரித்த பாகிஸ்தானின் தலைமையைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஒரு பக்கம் "உதவுங்கள்" என்று உலக நாடுகளிடம் கோரிக்கை. மற்றொரு பக்கம், இணைந்து செயல்படும் சாத்தியம் இல்லை என்று அறிவிப்பு. பாதிப்பு எல்லைக்கருகில் - காஷ்மீரில் - இருபக்கமும். அந்தப் பக்கம் மிக மிக அதிக பாதிப்பு. இங்கிருந்து எளிதாக ஹெலிகாப்டர்களையும் மற்ற உதவிகளையும் இந்தியா செய்ய முடியும். தயாராக இருக்கிறது. ஆனால் ஏற்கத்தான் மனதில்லை.
"எல்லைக் கோட்டருகில் மக்கள் யாரும் வசிக்கவில்லை" என்ற சப்பைக்கட்டு. வீம்புக்காக "அவர்கள் எங்களுக்குச் செய்வதாகச் சொன்ன உதவிகளை அவர்களுக்கு நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களை எந்நேரமும் இந்தியா இதற்காக அணுகலாம்".

பிணக்குவியல் மீது நின்று கொண்டு பிடிவாதத்தைத் தளர்த்தாத சாத்தான்கள். விலை - அப்பாவி காஷ்மீரிகள். வெட்கக்கேடு.

இந்த மாதிரித் தலைவர்களை மட்டும் விழுங்கும் பூகம்பம் வந்தால் நன்றாக இருக்கும்.

10 comments:

Unknown said...

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அகங்காரம் கொள்வதற்கும், அரசில் சாவால்கள் விடவும், இது நேரமில்லை.

தன்னால் இயலாத போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மற்றவரின் உதவியை ஏற்பதில் தவறில்லை.

என்ன செய்வது ...அரசில் அய்யா அரசியல்

erode soms said...

'இந்த மாதிரித் தலைவர்களை மட்டும் விழுங்கும் பூகம்பம் வந்தால் நன்றாக இருக்கும்'நான்கு சொன்னீர்.

"அல்லல்பட்டாற்றா தழுதகண் ணீர்ரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை"குறள்555

அல்லல்பட்ட மக்களின் கண்ணீர் மன்னனின் எல்லாசெல்வத்தையும் அழிக்கும்

kirukan said...

இந்த மாதிரித் தலைவர்களை மட்டும் விழுங்கும் பூகம்பம் வந்தால் நன்றாக இருக்கும்

well said

Anonymous said...

http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post_29.html

29/12/2004
"இந்தியா வெளிநாட்டு உதவி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது. அதுபற்றி எனக்குப் பெருமையாகவே இருக்கிறது. நம் பிரச்னைகளை நாம் தீர்த்துக் கொள்கிற தன்னிறைவின் ஓர் அம்சமாக இதைப் பார்க்கலாம்."

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4334590.stm

12/10/2005
Quake crisis brings rivals closer

"Indian troops have crossed the Line of Control dividing the disputed Kashmir region to help their Pakistani counterparts rebuild shattered bunkers."

Sundar Padmanaban said...

//to help their Pakistani counterparts rebuild **shattered bunkers**//

shattered bunkers???

I think they first should rebuild their mindsets to start looking at each other positively.

The need of the hour is helping the ones injured, dying in hunger, without shelter food or water.

The same article says...

//There has been no government help and no help even from any non-governmental organisation... I have seen people eating grass. People are dying of starvation," he said//

India's 25 tonnes of aid materials is insufficient. India can actually step up the aid significantly and send the relief team to PoK to help them. India should offer the Helicopters for rescuing the injured people from places which are inaccessible by road or any other means of transport.

தீமையிலும் நன்மை என்பது போல இரு தேசங்களும் நட்புடன் நெருங்கி வர இது சரியான சமயம். சந்தர்ப்பம்.

நல்லது நடக்கட்டும்

Anonymous said...

//எல்லைக் கோட்டருகில் மக்கள் யாரும் வசிக்கவில்லை" என்ற சப்பைக்கட்டு. வீம்புக்காக "அவர்கள் எங்களுக்குச் செய்வதாகச் சொன்ன உதவிகளை அவர்களுக்கு நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களை எந்நேரமும் இந்தியா இதற்காக அணுகலாம்"//.

அல்லாவே இந்தப் பாவிகளை மன்னிக்காதீர்.

எம்.கே.குமார் said...

///'இந்த மாதிரித் தலைவர்களை மட்டும் விழுங்கும் பூகம்பம் வந்தால் நன்றாக இருக்கும்///

உண்மைதான்!

என்னதான் வாய்கிழிய சமரசம் பேசினாலும் உள்ளத்தில் இருப்பது இதுதானென்றால் என்ன பேசி என்ன பயன்?

எம்.கே.குமார்,

Anonymous said...

if the plate sings the other way, i am sure, six pakistani guys would write (of course not in tamil) //எல்லைக் கோட்டருகில் மக்கள் யாரும் வசிக்கவில்லை" என்ற சப்பைக்கட்டு. வீம்புக்காக "அவர்கள் எங்களுக்குச் செய்வதாகச் சொன்ன உதவிகளை அவர்களுக்கு நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களை எந்நேரமும் பாக்கிஸ்தான் இதற்காக அணுகலாம்"//

if india refuses the hlp "we are proud of ourselves." if pakistan does, "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அகங்காரம் கொள்வதற்கும், அரசில் சாவால்கள் விடவும், இது நேரமில்லை."

Sundar Padmanaban said...

//if the plate sings the other way, i am sure, six pakistani guys would write (of course not in tamil) //

மன்னிக்கவும். நான் அப்படி நினைக்கவில்லை. சொந்தமாகச் சமாளித்துக் கொள்ள முடியாத பேரழிவு இந்தியாவில் நிகழும் பட்சத்தில் பாக்கிஸ்தான் உதவிக் கரம் நீட்டினால் ஏன் வேறு எந்த அணடை நாடுகள் உதவிக் கரம் நீட்டினாலும் அதை இந்தியா எந்த தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

சுனாமியின் போது ஏற்பட்ட அழிவுகளைச் சமாளிக்க நம்மால் முடிந்தது. அதனால் மற்ற நாடுகளின் உதவிகளை - குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் உதவிகளை வேண்டாம் என்று சொன்னோம். இதில் பெருமையடித்துக் கொள்ள ஒன்றும் இல்லை. ஏன் இலங்கைக்கும் உதவினோமே.

மற்ற நாடுகளின் உதவியை ஏற்றுக் கொண்டு பாக்கிஸ்தானை மட்டும் நிராகரித்திருந்தால் அதுவும் கண்டனத்துக்குரிய செயலே.

//if india refuses the hlp "we are proud of ourselves." if pakistan does, "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அகங்காரம் கொள்வதற்கும், அரசில் சாவால்கள் விடவும், இது நேரமில்லை." //

மிகவும் சரி. இந்தியாவோ பாக்கிஸ்தானோ - பகையை முன்னிறுத்தவேண்டிய நேரம் இதுவல்ல என்பதே என் ஆதங்கம்.

மறுமொழியிட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

Unknown said...

//if india refuses the hlp "we are proud of ourselves." if pakistan does, "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அகங்காரம் கொள்வதற்கும், அரசில் சாவால்கள் விடவும், இது நேரமில்லை."//

தன்னால் இயலாத போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மற்றவரின் உதவியை ஏற்பதில் தவறில்லை என்று கூறியுள்ளேன் கவனிக்கவும்.

இந்தியாவால் முடிந்தது அதனால் அது மற்ற நாட்டின் உதவி தேவை இல்லை என்று கூறியது.

தற்போது பாகிஸ்தானின் நிலை வேறு.

அவர்கள் உதவி வேண்டும் என்று கேட்கிறார்கள்..
உதவியை ஏற்றுக் கொள்கிறார்கள்..
ஆனால் இந்தியா உதவி செய்ய நினைத்தால் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.